Know the word PROMULGATE...

Word of the day is PROMULGATE...
Pronunciation
/ˈprɑː.məl.ɡeɪt/

Function
The word PROMULGATE is a verb.

Meaning
It means to spread or to announce beliefs or ideas or new laws publicly என்று சொல்லலாம் அதாவது நம்பிக்கைகள் அல்லது கருத்துக்கள் அல்லது புதிய சட்டங்கள் போன்றவற்றை பொதுவில் பரப்புதல் அல்லது அறிவித்தல் என்று அர்த்தம்.

ஒரு மதமானது அல்லது ஒரு இனமானது அல்லது ஒரு குழுவானது அல்லது ஒரு நிறுவனமானது அதனுடைய கோட்பாடுகளை அல்லது மதிப்பீடுகளை அல்லது சட்ட திட்டங்களை எல்லோருக்கும் தெரியப்படுத்துகிற இடத்தில் அல்லது அறிவிக்கிற இடத்தில் அல்லது விளம்பரப்படுத்துகிற இடத்தில் இந்த PROMULGATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு அரசாங்கமானது புதிதாக இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை அல்லது விதிமுறையை அறிவிக்கிற இடத்தில் அல்லது அறிவித்து ஒரு குறிப்பிட்ட நாளில் நடைமுறைப்படுத்துகிற இடத்தில் இந்த PROMULGATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு மனிதன் அவனுடைய எண்ணங்களை அல்லது நம்பிக்கைகளை அல்லது தத்துவம் நிறைந்த கருத்துக்களை எழுதி வெளியிட்டு எல்லோரும் அறியும்படி பரப்புகிற இடத்தில் இந்த PROMULGATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக ஒரு மதமோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு அரசாங்கமோ கோட்பாடுகளை, விதிமுறைகளை, சட்டதிட்டங்களை, மதிப்பீடுகளை, நம்பிக்கைகளை, தத்துவம் நிறைந்த கருத்துக்களை, அறிவிக்கிற இடத்தில் அல்லது வெளிப்படுத்துகிற இடத்தில் அல்லது எல்லோரும் அறியும்படி பரப்புகிற இடத்தில் அல்லது எல்லோருக்கும் அறிவித்து நடைமுறைப்படுத்துகிற இடத்தில் இந்த PROMULGATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் எல்லோருக்கும் அறிவித்தல் அல்லது தெரிவித்தல் அல்லது விளம்பரப்படுத்துதல் அல்லது பரப்புதல் அல்லது நடைமுறைப்படுத்துதல் போன்ற அர்த்தங்களில் இந்த PROMULGATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
They are trying to promulgate their beliefs and values.
அவர்கள் தங்களது நம்பிக்கைகளையும் மதிப்பீடுகளையும் பரப்ப முயற்சிக்கிறார்கள்.

The new law was promulgated last year.
கடந்த ஆண்டு புதிய சட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் எல்லோருக்கும் அறிவித்தல் அல்லது தெரிவித்தல் அல்லது விளம்பரப்படுத்துதல் அல்லது பரப்புதல் அல்லது நடைமுறைப்படுத்துதல் போன்ற அர்த்தங்களில் இந்த PROMULGATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...