Know the word RETRENCHMENT...

Word of the day is RETRENCHMENT...
Pronunciation
/rɪˈtrentʃ.mənt/

Function
The word RETRENCHMENT is a noun.

Meaning
It refers to the reduction of expenditures in order to become financially stable என்று சொல்லலாம் அதாவது ஒரு நிலையான நிதி நிலையை ஏற்படுத்துவதற்காக செலவினங்களைக் குறைத்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு நிறுவனமோ கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுது அந்த நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக செலவினங்களை குறைக்கிற இடத்தில் இந்த RETRENCHMENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

சமீபத்தில் உலக நாடுகள் முழுவதுமே மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறது ஆதலால் சில நாடுகள் வரியை உயர்த்திக் கொண்டே இருக்கிறது மேலும் சில நாடுகள் செலவினங்களை குறைத்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் சில நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் பணியாட்களை குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.

இவ்வாறாக ஒரு நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாட்களை குறைக்கிற இடத்திலும் இந்த RETRENCHMENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் சாதாரணமாக ஒரு குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படும்பொழுது அந்த குடும்பம் செலவினங்களை குறைக்கிற இடத்திலும் கூட இந்த RETRENCHMENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

பொதுவான ஒரு கருத்து சொல்ல வேண்டுமென்றால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும் பொழுது இந்த RETRENCHMENTஐ கடைபிடிப்பது நல்லது.

எனவே தமிழில் செலவினங்களைக் குறைத்தல் அல்லது ஆட்குறைப்பு என்ற அர்த்தத்தில் இந்த RETRENCHMENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Due to financial crisis the Twitter has done major retrenchment.
நிதி நெருக்கடி காரணமாக ட்விட்டர் நிர்வாகம் பெரும் ஆட்குறைப்பு செய்துள்ளது.

Retrenchment is always good because it leads towards growth.
செலவினங்களைக் குறைத்தல் எப்போதும் நல்லது, ஏனெனில் அது வளர்ச்சியை நோக்கி வழி நடத்தும்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் செலவினங்களைக் குறைத்தல் அல்லது ஆட்குறைப்பு என்ற அர்த்தத்தில் இந்த RETRENCHMENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...