Know the word SAGACIOUS...

Word of the day is SAGACIOUS...
Pronunciation
/səˈɡeɪ.ʃəs/

Function
The word SAGACIOUS is an adjective.

Meaning
It means having or showing understanding and the ability to make good judgments என்று சொல்லலாம் அதாவது புரிதல் மற்றும் நல்ல தீர்ப்புகளை வழங்குதல் போன்ற திறனைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே இந்த SAGACIOUS என்ற இந்த வார்த்தையானது அதிகப்படியான மதிநுட்பம் உடைய ஒரு நபரை விவரிப்பதற்காக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு நிறுவனமோ ஒரு திட்டத்தை அறிவிக்கும் பொழுது அந்தத் திட்டத்தை மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒரு சாதாரண மனிதனுக்கு அந்தத் திட்டமானது மிகவும் சிறந்த ஒன்றாக தெரியலாம் ஆனால் அதே நேரத்தில் இந்த SAGACIOUS திறனை கொண்டவர்கள் அந்தத் திட்டத்தினுடைய அடிப்படையை வெகு விரைவாக ஆராய்ந்து அதனுடைய நன்மை தீமையை உடனடியாக எடுத்து சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களைத்தான் ஒரு நாட்டின் தலைவர்கள் தங்களது அருகாமையில் வைத்து கொள்வார்கள்.

இப்படிப்பட்டவர்களைத்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு  அருகாமையில் வைத்துக் கொள்வார்கள்.

இப்படிப்பட்டவர்கள்தான் உளவுத்துறையில் பணிபுரிய தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள்.

ஏனென்றால் இவர்கள் ஒரு விஷயத்தை ஒரு சாதாரண மனிதனை விட வெகு விரைவில் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள் மேலும் அதனைக் குறித்து மிகவும் விரைவாக நல்லதொரு முடிவை எடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

எனவே தமிழில் புத்திசாலித்தனமான, சாதுரியமான, சாமர்த்தியமான அல்லது அறிவு நுட்பமுடைய போன்ற அர்த்தங்களில் இந்த SAGACIOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He is a sagacious statesman.
அவர் ஒரு சாதுரியமான அரசியல்வாதி.

The teacher was not able to answer his sagacious questions.
அவனுடைய சாமர்த்தியமான கேள்விகளுக்கு ஆசிரியரால் பதில் அளிக்க முடியவில்லை.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் புத்திசாலித்தனமான, சாதுரியமான, சாமர்த்தியமான அல்லது அறிவு நுட்பமுடைய போன்ற அர்த்தங்களில் இந்த SAGACIOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...