Know the word SPURIOUS...

Word of the day is SPURIOUS...
Pronunciation
/ˈspjʊr.i.əs/

Function
The word SPURIOUS is an adjective.

Meaning
It means false or inauthentic என்று சொல்லலாம் அதாவது தவறான அல்லது நம்பகத்தன்மையற்ற என்று அர்த்தம்.

அதாவது ஒரு விஷயம் பொய்யானதாக அல்லது போலியானதாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த SPURIOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒருவர் பொய்யான அல்லது போலியான தகவல்களை சொல்லும் பொழுது அந்த தகவல்களைப் SPURIOUS INFORMATION என்று சொல்லலாம்.

அதைப் போலவே ஒரு உணவு பொருள் கலப்படம் நிறைந்ததாக, தரம் குறைந்ததாக அதனுடைய அசல் தரத்தை இழந்து நிற்கும் பொழுது அதனை SPURIOUS FOOD ITEMS அல்லது SPURIOUS DRINKS என்று சொல்லலாம்.

அதைப் போலவே திருட்டுத்தனமாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டிருக்கும் போலியான பணத்தை கள்ள நோட்டு என்று சொல்லுவோம் ஆங்கிலத்தில் COUNTERFEIT NOTES அல்லது COUNTERFEIT CURRENCY அல்லது COUNTERFEIT MONEY என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள் அதனை SPURIOUS CURRENCY அல்லது SPURIOUS MONEY என்றும் கூட சொல்லலாம்.

அதைப் போலவே மருத்துவத்திற்காக காப்பீடு பெறுகின்ற ஒருவர் போலியான ரசீதுகளை உருவாக்கி அதற்கான பணத்தை பெற முயற்சி செய்யும் பொழுது அதனை SPURIOUS CLAIMS என்று சொல்லலாம்.

இவ்வாறாக ஏதாவது ஒரு விஷயம் போலியானதாக அல்லது நேர்மையற்றதாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த SPURIOUS என்ற இந்த ADJECTIVE ஐ பயன்படுத்தலாம்.

எனவே நண்பர்களே! முடிந்தவரை வாழ்க்கையில் நேர்மையானவர்களாக இருக்க முயற்சி செய்வோம்.

எனவே தமிழில் பொய்யான அல்லது போலியான அல்லது போலித்தனமான போன்ற அர்த்தங்களில் இந்த SPURIOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
He is leading a spurious life.
அவன் ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான்.

The survey says that lot of spurious information are spread through social media.
சமூக வலைதளங்கள் மூலமாக பல போலியான தகவல்கள் பரப்பப்படுவதாக கணக்கெடுப்பு கூறுகிறது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் பொய்யான அல்லது போலியான அல்லது போலித்தனமான போன்ற அர்த்தங்களில் SPURIOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...