Know the word WITHSTAND...
Word of the day is WITHSTAND...
/wɪðˈstænd/
Function
The word WITHSTAND is a verb.
Meaning
It means remain undamaged or unaffected by என்று சொல்லலாம் அதாவது சேதமடையாமல் அல்லது பாதிக்கப்படாமல் இருத்தல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு பொருளோ அல்லது ஒரு மனிதனோ தன்னை எதிர்க்கின்ற ஒரு சக்தியை அல்லது தகர்க்க முனைகின்ற ஒரு சக்தியை அந்த சக்தி தீய சக்தியாக கூட இருக்கலாம் அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு தன்னை நிலை நிறுத்தும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.
எடுத்துக்காட்டாக நாம் அடிக்கடி உதாரணமாக பயன்படுத்தும் ஒரு எடுத்துக்காட்டை கூட சொல்லலாம் அதாவது கல்லானது உளியால் அடிக்கப்படும் பொழுது அந்த அடிகளை எதிர்கொண்டு, அந்த அடிகளை தாங்கி, சேதம் அடையாமல் நிற்கும் பொழுது தான் அந்த கல்லிலிருந்து ஒரு அருமையான சிற்பம் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறாக ஒரு பொருளோ அல்லது ஒரு மனிதனோ தன்னை எதிர்க்கின்ற ஒரு சக்தியை அல்லது தகர்க்க முனைகின்ற ஒரு சக்தியை வெற்றிகரமாக எதிர்கொண்டு தன்னை நிலை நிறுத்தும் பொழுது இந்த WITHSTAND இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் தாங்குதல் அல்லது தாங்கி நிற்றல் என்ற அர்த்தத்தில் இந்த WITHSTAND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The people who live in the earthquake
prone areas design buildings which
withstand the earthquake.
நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டிடங்களை வடிவமைக்கிறார்கள்.
The mobile 1100 withstood all kinds of rough treatment.
மொபைல் 1100 என்ன செய்தாலும் தாங்கி நின்றது.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் தாங்குதல் அல்லது தாங்கி நிற்றல் என்ற அர்த்தத்தில் இந்த WITHSTAND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக