Know the idiom AS COOL AS CUCUMBER..

Idiom is AS COOL AS CUCUMBER.
Function
The idiom, AS COOL AS CUCUMBER should be used in a sentence keeping cool as an adjective.

Meaning
It means very calm என்று சொல்லலாம் அதாவது மிகவும் அமைதியான என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு விஷயத்தை குறித்து எல்லோரும் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும் பொழுது அல்லது ஒரு விஷயத்தை குறித்து எல்லோரும் ரொம்ப ரொம்ப ரொம்ப மன வேதனையில் இருக்கும் பொழுது ஒரு மனிதன் மட்டும் எந்தவித சஞ்சலமும் இல்லாதது போன்று, எந்தவித பதட்டமும் இல்லாதது போன்று, எந்த விதமான சந்தோஷமும் இல்லாதது போன்று, தனது உணர்ச்சியை எந்தவிதத்திலும் வெளிக்காட்டாமல்  COOL ஆக இருக்கும்பொழுது அந்த மனிதனை இந்த AS COOL AS CUCUMBER என்ற இந்த IDIOM ஐ கொண்டு விவரிக்கலாம்.

அதைப் போலவே மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியதால் ஒருவர் பாராட்டப்படும் பொழுது அல்லது ஒரு விஷயத்தை குறித்து எல்லோரும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மனிதன் மட்டும் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்  அமைதியாக, COOL ஆக எந்தவித சஞ்சலமும் இல்லாமல் ஒருவர் இருக்கும்பொழுது அந்த மனிதனை இந்த AS COOL AS CUCUMBER என்ற இந்த IDIOM ஐ கொண்டு விவரிக்கலாம்.

AS COOL AS CUCUMBER என்ற இந்த IDIOM ஐ கொண்டு ஒருவரை விவரிக்கும் பொழுது அவரை உயர்வாக பாசிட்டிவாக பேசுகிறோம் என்று அர்த்தம்.

எனவே தமிழில் அமைதியான, சாந்தமான, பதட்டமில்லாத, படபடப்பு இல்லாத, பயம் இல்லாத போன்ற அர்த்தங்களில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
Though it was a stressful time for all of us, he was as cool as cucumber.
நாங்கள் எல்லோரும் மிகவும் மன அழுத்தமான ஒரு சூழலில் இருந்த இருந்தபொழுதும் அவன் அமைதியாகவே இருந்தான்.

Although it was her first time on stage, she was as cool as cucumber.
அவளுக்கு மேடையில் ஏறுவது இதுவே முதல் முறை என்ற போதிலும், அவள் பதட்டமில்லாமலே இருந்தாள்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த AS COOL AS CUCUMBER என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்கள்.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...