Know the idiom AS FRESH AS A DAISY...

Let's learn an idiom today...
The Idiom is AS FRESH AS A DAISY.
Function
The idiom, AS FRESH AS A DAISY should be used in a sentence keeping fresh as an adjective.

Meaning
It means to be full of energy and enthusiasm என்று சொல்லலாம் அதாவது ஊக்கமும் உற்சாகமும் நிறைந்திருக்கின்ற என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒருவரை பார்க்கும் பொழுது துடிதுடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் முகத்தில் எந்தவித சோர்வும் தெரியாத விதமாகவும் இருக்கும் பொழுது அந்த நபரை இந்த AS FRESH AS A DAISY என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தி விவரிக்கலாம்.

மேலும் நண்பர்களே! ஒருவர் துடிதுடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் ஊக்கம் நிறைந்தவராகவும் இருக்க வேண்டுமென்றால் அவர் ஆரோக்கியம் நிறைந்தவராக இருக்க வேண்டும்.

எனவே நண்பர்களே! இந்த IDIOM ஆனது துடிதுடிப்பான, சுறுசுறுப்பான ஆரோக்கியம் நிறைந்த, ஊக்கம் நிறைந்த, ஆற்றல் நிறைந்த,  சோர்வற்ற போன்ற அனைத்து விதமான நேர்மறை அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

எனவே தமிழில் மிகவும் துடிதுடிப்பான, மிகவும் சுறுசுறுப்பான, சோர்வற்ற போன்ற அர்த்தங்களில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
He is as fresh as a daisy.
அவன் மிகவும் துடிதுடிப்பானவனாக இருக்கிறான் அல்லது அவன் மிகவும் துடிதுடிப்பானவனாக செயல்படுகிறான்.

He is not so fresh as a daisy today.
அவன் இன்று சுறுசுறுப்பாக செயல்படவில்லை.

If I get a good sleep tonight, I will be as fresh as a daisy.
நான் இன்று இரவு நன்றாக தூங்கினால், நான் சோர்வற்றவனாக மாறி விடுவேன்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த AS FRESH AS A DAISY என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்கள்.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...