Know the idiom IN THE WAKE OF SOMETHING...
The IDIOM is IN THE WAKE OF SOMETHING...
Meaning
It means happening after an event or as a result of it என்று சொல்லலாம் அதாவது ஒரு நிகழ்வுக்குப் பிறகு அல்லது அதன் விளைவாக நடக்கின்ற என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதன் விளைவாக அல்லது நடைபெற்றதன் விளைவாக இன்னொரு நிகழ்ச்சி நடைபெறும் பொழுது அந்த இடத்திலே IN THE WAKE OF SOMETHING என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு இடத்திலே ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதனால் அல்லது ஒரு முக்கியமான நபர் ஒருவர் வருகை தருவதனால் அந்த இடத்திற்கு பாதுகாப்பை அதிகப்படுத்தும் போது அந்த இடத்திலே IN THE WAKE OF SOMETHING என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.
அதைப்போலவே ஒரு இடத்திலே ஒரு வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறும் பொழுது அதன் விளைவாக காவல்துறையானது பாதுகாப்பை அதிகப்படுத்துகிற இடத்திலே IN THE WAKE OF SOMETHING என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.
இவ்வாறாக ஒரு நிகழ்ச்சியானது ஒரு நிகழ்ச்சியின் விளைவாக அல்லது அதனை முன்னிட்டு நடைபெறும் பொழுது அந்த இடத்திலே IN THE WAKE OF SOMETHING என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் விளைவாக அல்லது முன்னிட்டு போன்ற அர்த்தங்களில் இந்த IN THE WAKE OF SOMETHING என்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம்.
மேலும் நண்பர்களே! IN THE WAKE OF SOMETHING என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது அந்த SOMETHING என்ற வார்த்தைக்கு பதிலாக இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது அல்லவா அவற்றில் முதலாவதாக நடைபெறும் நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டும்.
In a sentence
In the wake of football World Cup, many people from different countries have come to Qatar.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு, பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் கத்தாருக்கு வந்துள்ளனர்.
In the wake of bomb blasts, police have increased the protection for the people.
குண்டுவெடிப்பு சம்பவத்தின் விளைவாக, பொதுமக்களுக்கு பாதுகாப்பை போலீசார் அதிகப்படுத்தியுள்ளனர்.
Practice it
எனவே நண்பர்களே! விளைவாக அல்லது முன்னிட்டு போன்ற அர்த்தங்களில் இந்த IN THE WAKE OF SOMETHING என்ற IDIOM ஐ பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக