Know the idiom SHED CROCODILE TEARS...

Let's learn an idiom today...
Function
The idiom, SHED CROCODILE TEARS is a verb.

Meaning
It means to pretend to be sad or to sympathize with someone without really caring about them என்று சொல்லலாம் அதாவது சோகமாக இருப்பது போல் நடிப்பது அல்லது பிறர் மீது அக்கறையாக இருப்பது போல் பொய்யான அனுதாபம் காட்டுவது என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த SHED CROCODILE TEARS என்ற இந்த IDIOM ஐ வெளிவேடக்காரர்கள் வடிக்கும் கண்ணீருக்கு ஒப்பிடலாம்.

அதாவது ஒரு நபர் சோகத்தில் இருக்கும் பொழுது அந்த சோகத்தில் இருக்கும் நபருடன் தானும் சோகத்தில் இருப்பது போல் நடித்து, பொய்யாக கண்ணீர் வடித்து  பிறரை ஏமாற்றும் பொழுது அந்த இடத்திலே இந்த SHED CROCODILE TEARS என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

இவ்வாறு ஒரு நபர் பொய்யாக கண்ணீர் வடித்து சோகத்தில் இருப்பது போல் நடிக்கும் பொழுது அந்த நபரை நீல கண்ணீர் வடிக்கிறார் என்று நாம் தமிழில் சொல்லுவோம்.

இப்படிப்பட்டவர்களை நமது உறவினர்கள் மத்தியில் பார்க்க முடியும். நாம் வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பார்க்க முடியும். மேலும் அரசியல்வாதிகள் பல பேர் இவ்வாறு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த SHED CROCODILE TEARS என்ற இந்த IDIOM இல் வரும் SHED என்ற வார்த்தையை VERB ஆக பாவித்து இந்த IDIOM ஐ ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் நீல கண்ணீர் வடித்தல், சோகமாக இருப்பது போல் நடித்தல், பொய்யாக அழுதல் போன்ற அர்த்தங்களில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
The politician is said to be shedding crocodile tears.
அந்த அரசியல்வாதி நீல கண்ணீர் வடிப்பதாகக் கூறப்படுகிறது.

Sometimes it is impossible to find out the people who shed crocodile tears.
சில சமயங்களில் முதலைக் கண்ணீர் வடிப்பவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாது.

Practice it
எனவே நண்பர்களே! இந்த SHED CROCODILE TEARS என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்கள்.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...