Know the word PAST...

Word of the day is PAST...
Pronunciation
/pæst/

Function
The word PAST can be used as adjective, adverb and preposition.

Meaning
நண்பர்களே! PAST என்ற இந்த வார்த்தையை கடந்த அல்லது கடந்து அல்லது தாண்டி என்ற தமிழ் அர்த்தத்தில் நிறைய இடங்களில் பயன்படுத்தலாம்.

முதலாவதாக ஒருவர் நம்மை கடந்து நாம் செல்லும் திசையிலோ அல்லது நமக்கு எதிர் திசையிலோ செல்லும் பொழுது பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக He went past me in a bike but he did not notice me என்று சொல்லலாம் அதாவது அவன் பைக்கில் என்னைக் கடந்து சென்றான் ஆனால் அவன் என்னைக் கவனிக்கவில்லை என்று அர்த்தம்.

இரண்டாவதாக PAST என்ற இந்த வார்த்தையை ஒரு இடத்தை கடந்து இன்னொரு இடத்தை அடையும் இடத்தில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக You have to go past the post office to reach the bus stand என்று சொல்லலாம் அதாவது பேருந்து நிலையத்தை அடைய தபால் நிலையத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று அர்த்தம்.

மூன்றாவதாக PAST என்ற இந்த வார்த்தையானது ஆங்கிலத்தில் நேரத்தை சொல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக The time is ten past five என்று சொல்ல வேண்டும் அதாவது நேரமானது ஐந்தை கடந்து பத்து நிமிடம் ஆகிறது என்று அர்த்தம்.

நான்காவதாக PAST என்ற இந்த வார்த்தையை ஒரு குறிப்பிட்ட வயதை கடக்கின்ற இடத்தில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக He has past the age of schooling என்று சொல்லலாம் அதாவது அவன் பள்ளி பருவத்தை கடந்து விட்டான் என்று அர்த்தம்.

ஐந்தாவதாக ஒரு குறிப்பிட்ட கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் வரை என்று நேரத்தை குறிப்பிட்டு பேசும் பொழுது பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக He has been travelling for the past three days without rest என்று சொல்லலாம் அதாவது அவன் கடந்த மூன்று நாட்களாக ஓய்வின்றி பயணம் செய்து கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.

ஆறாவதாக கடந்த காலத்தில் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட நிகழ்வை குறிப்பிட்டு பேசும் இடத்தில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக She will share with us her past experience என்று சொல்லலாம் அதாவது அவள் தனது கடந்த கால அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்வாள் என்று அர்த்தம்.

ஏழாவதாக ஒரு குறிப்பிட்ட விஷயம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து விட்டது அல்லது முடிந்து விட்டது என்னும் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக It seems that the raining season is past now என்று சொல்லலாம் அதாவது இப்போது மழைக்காலமானது கடந்துவிட்டது போல் தெரிகிறது என்று அர்த்தம்.

எட்டாவதாக இனிமேலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பொருட்படுத்தப் போவதில்லை அல்லது இனிமேலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை குறித்து கவலைப்பட போவதில்லை என்று சொல்லும் இடத்தில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக I am past caring his presence என்று சொல்லலாம் அதாவது நான் அவன் இருப்பதை ஒரு பொருட்டாக நினைக்கப் போவதில்லை அல்லது நான் அவனை குறித்து கவலைப்பட போவதில்லை என்று அர்த்தம்.

Practice it
எனவே நண்பர்களே! மேற்கூறிய அர்த்தங்களில் இந்த PAST என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...