Know the idiom THREE DOG NIGHT...

Know the Idiom THREE DOG NIGHT.
Function
The idiom, THREE DOG NIGHT is a noun.

Meaning
It means very cold night என்று சொல்லலாம் அதாவது ரொம்ப குளிரான இரவு என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! வெயில் காலத்துல வெப்பத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள வீடுகளில் ஏசி பயன்படுத்துவது வழக்கம். அதைப்போலவே குளிரான தேசங்களில் கடுங்குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் HEATER பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது.

HEATER என்று ஒன்றை கண்டுபிடிப்பதற்கு முன்பு மக்கள் தங்களது படுக்கையை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வதற்காக படுக்கையில் நாய்களை பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

குளிரின் பயங்கரத்தை பொருத்து தேவையான நாய்களின் எண்ணிக்கையை கூட்டியதாக கூறப்படுகிறது. எனவே குளிரான இரவு காலங்களில் இரண்டு நாய்களை படுக்கையில் வைத்து தூங்கியதாகவும் ரொம்ப குளிரான இரவு காலங்களில் மூன்று நாய்களை படுக்கையில் வைத்து தூங்கியதாகவும் கடுங்குளிரான இரவு காலங்களில் நான்கு நாய்களை படுக்கையில் வைத்து தூங்கியதாகவும் கூறப்படுகிறது.

எனவே இதன் அடிப்படையில் TWO DOG NIGHT, THREE DOG NIGHT & FOUR DOG NIGHT என்று IDIOMS களும் உருவாகின.

எனவே தமிழில் Two dog night என்றால் குளிரான இரவு என்று அர்த்தம். Three dog night என்றால் ரொம்ப குளிரான இரவு என்று அர்த்தம். Four dog night என்றால் கடுங்குளிரான இரவு என்று அர்த்தம்.

In a sentence
We don't go out during three dog night.
ரொம்ப குளிரான இரவில் நாங்கள் வெளியே செல்வதில்லை.

You should wear your jacket to keep you warm during four dog nights.
கடுங்குளிரான இரவுகளில் உன்னை வெதுவெதுப்பாக வைத்திருக்க நீ உனது ஜாக்கெட்டை அணிய வேண்டும்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த TWO DOG NIGHT, THREE DOG NIGHT & FOUR DOG NIGHT என்ற இந்த IDIOMS ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்கள்.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...