Know the word AFFORD...
Word of the day is AFFORD...
/əˈfɔːrd/
Function
The word AFFORD is a verb.
Note
AFFORD என்ற இந்த வார்த்தையை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
Meaning
முதலாவதாக It means to have enough money or time to spend for என்று சொல்லலாம் அதாவது செலவழிக்க போதுமான பணமோ அல்லது நேரமோ இருத்தல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒருவரிடத்தில் ஒரு பொருள் வாங்குவதற்கு போதுமான பணம் இருக்கும் இடத்தில் அல்லது ஒருவரிடத்தில் ஒரு காரணத்திற்காக செலவு செய்வதற்கு போதுமான நேரம் இருக்கும் இடத்தில் AFFORD என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது CAN AFFORD அல்லது CAN'T AFFORD என்று CAN என்ற வார்த்தையை இதோடு இணைத்தே பயன்படுத்த வேண்டும்.
இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் வாங்க முடிதல் அல்லது செலவு செய்ய முடிதல் என்று அர்த்தத்தில் AFFORD என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
Meaning
இரண்டாவதாக It means to provide or supply something என்று சொல்லலாம் அதாவது ஏதாவது ஒன்றை வழங்குதல் அல்லது அளித்தல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒருவர் ஒரு இனிமையான அல்லது அவசியமான ஒன்றை பெறுகிற இடத்தில் பயன்படுத்தலாம் மேலும் ஒருவருக்கு ஒரு வசதியை அல்லது ஒரு வாய்ப்பை வழங்குகிற இடத்தில் பயன்படுத்தலாம்.
எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் போது தமிழில் வழங்குதல் அல்லது அளித்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
மேலும் இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது CAN என்ற வார்த்தை இதனுடன் வராது.
In a sentence
I can't afford to buy this mobile.
இந்த மொபைலை வாங்க என்னால் முடியாது.
Can you afford some more time with us?
எங்களுடன் இன்னும் சிறிது நேரம் செலவு செய்ய முடியுமா?
This hotel affords all the facilities.
இந்த ஹோட்டல் அனைத்து வசதிகளையும் வழங்குகிறது.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் மேற்சொன்ன அர்த்தங்களில் இந்த AFFORD என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக