Know the word AVARICIOUS...
Word of the day is AVARICIOUS...
/ˌæv.əˈrɪʃ.əs/
Function
The word AVARICIOUS is an adjective.
Meaning
It means showing an extremely strong wish to get or keep money or possessions என்று சொல்லலாம் அதாவது பணம் அல்லது உடைமைகளைப் பெற அல்லது வைத்திருக்க அதிகப்படியான விருப்பத்தைக் காட்டுகிற என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒருவருக்கு காசு, பணம், சொத்து மேல தீராத ஆசை இருக்கும் பொழுது அவரை AVARICIOUS என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.
இவர்கள் காசு பணத்திற்காக எதையும் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களது எண்ணம் ஏக்கம் எல்லாமே காசு பணத்தின் மேலேயே எப்பொழுதும் இருக்கும். இவர்கள் ஒரு காரியம் செய்தால் அதில் தனக்கு என்ன லாபம் இருக்கிறது என்று யோசிப்பவர்களாகவே இருப்பார்கள். இவர்களால் மற்ற யாருக்கும் எந்த லாபமும் இருக்காது.
இவர்கள் பணத்தின் மீது அதிக ஆசை கொண்டிருப்பவர்களாக இருப்பதால் பணத்தை செலவழிக்க மாட்டார்கள் கஞ்சத்தனமானவர்களாகவே இருப்பார்கள்.
இவர்களை கேவலமானவர்கள் என்று கூட சொல்லலாம்.
எனவே தமிழில் பேராசை கொண்ட அல்லது கஞ்சத்தனமான அல்லது கேவலமான போன்ற அர்த்தங்களில் இந்த AVARICIOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
He is avaricious and so you can't expect anything good from him.
அவன் பேராசை கொண்டவன் அதனால் அவனிடமிருந்து நல்லது எதையும் எதிர்பார்க்க முடியாது.
He does not spend his money because he is avaricious.
அவர் கஞ்சத்தனமானவர் என்பதால் அவர் தனது பணத்தை செலவிடுவதில்லை.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் பேராசை கொண்ட அல்லது கஞ்சத்தனமான அல்லது கேவலமான போன்ற அர்த்தங்களில் இந்த AVARICIOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக