Know the word CLUTTER...
Word of the day is CLUTTER...
/ˈklʌt.ər/
Function
The word CLUTTER can be used as noun and verb.
Meaning
It means a state of being untidy என்று சொல்லலாம் அதாவது ஒழுங்கற்று இருக்கும் நிலை என்று அர்த்தம்.
நண்பர்களே! ஒழுங்கற்று இருக்கும் நிலை என்ற அர்த்தத்தில் CLUTTER என்ற இந்த வார்த்தையை மூன்று விதமாக பயன்படுத்தலாம்.
முதலாவதாக ஒரு இடத்தில் சீராக ஒழுங்காக இருக்க வேண்டிய பொருட்கள் இங்கும் அங்குமாக ஒழுங்கற்று சிதறி கிடக்கும் பொழுது பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு மேஜையின் மேல் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் என பல பொருட்கள் ஒழுங்கற்று சிதறி கிடக்கும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.
அதைப்போலவே ஒரு அறையில் இருக்க வேண்டிய பொருட்கள் ஒழுங்காக, ஒரு சீராக அடுக்கி வைக்கப்படாமல் இங்கும் அங்குமாக சிதறி கிடக்கும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.
எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் ஒழுங்கற்று இருத்தல் அல்லது சிதறி கிடத்தல் என்ற அர்த்தத்தில் இந்த CLUTTER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இரண்டாவதாக இந்த CLUTTER என்ற இந்த வார்த்தையை ஒரு ஓசையோ அல்லது ஒரு இசையோ அல்லது ஒரு ஒலியோ தெளிவில்லாமல் ஒழுங்கற்று கேட்கும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக நாம் தொலைபேசியில் பேசும்பொழுது எதிர்முனையில் பேசுபவர் என்ன பேசுகிறார் என்பது தெளிவில்லாமல் இரைச்சலோடு கேட்கும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.
எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் இரைச்சல் என்ற அர்த்தத்தில் இந்த CLUTTER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
மூன்றாவதாக இந்த CLUTTER என்ற இந்த வார்த்தையை உருவகமாகவும் பயன்படுத்தலாம் அதாவது ஒரு மனிதனின் மனது ஒழுங்கற்று பல எண்ணங்களால் சீர்குலைந்து குழம்பி இருக்கும் பொழுது அந்த இடத்திலும் இந்த CLUTTER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் குழம்பி இருத்தல் என்ற அர்த்தத்தில் இந்த CLUTTER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
Toys were cluttered everywhere in the room by the kids.
குழந்தைகளால் அறையின் எல்லா இடங்களிலும் பொம்மைகள் சிதறி கிடந்தன.
Your voice is not so clear to me. It is cluttered.
உனது குரல் எனக்கு தெளிவாக இல்லை. அது இரைச்சலாக இருக்கிறது.
My mind is cluttered with many things. I do not have peace.
என் மனம் பல விஷயங்களில் குழம்பியுள்ளது. எனக்கு நிம்மதி இல்லை.
Practice it
எனவே நண்பர்களே! இந்த CLUTTER என்ற வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக