Know the word CRAFTY...

Word of the day is CRAFTY...
Pronunciation
/ˈkræf.ti/

Function
The word CRAFTY is an adjective.

Note
CRAFTY என்ற இந்த வார்த்தையை POSTIVE ஆக ஒரு அர்த்தத்திலும் NEGATIVE ஆக மற்றொரு அர்த்தத்திலும் என இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

Meaning
முதலாவதாக POSTIVE ஆன அர்த்தத்தில் பார்க்கும் பொழுது It means relating to crafts or interested in crafts என்று சொல்லலாம் அதாவது கைவினை பொருட்கள் தொடர்பான அல்லது கைவினைகளில் ஆர்வமான என்று அர்த்தம்.
 
அதாவது நண்பர்களே! மரச்சாமாண்கள் கொண்டு, துணிகள் கொண்டு, காகிதம் கொண்டு, பல வண்ணங்கள் கொண்டு, வெட்டுதல், ஒட்டுதல், தைத்தல் என செய்யப்படும் கைவினை பொருட்களையும் அதனை செய்வதில் ஆர்வம் கொண்ட நபரையும் இந்த CRAFTY என்ற இந்த வார்த்தையை கொண்டு குறிக்கலாம்.

எனவே ஒரு நபரை She is very crafty or he is very crafty என்று சொல்லும் பொழுது அவர் கைவினைப் பொருட்கள் செய்யக்கூடியவர் அல்லது அவர் கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர் என்று அர்த்தமாகும்.

மேலும் She has all kinds of crafty items என்று சொல்லும் பொழுது அவளிடம் எல்லா வகையான கைவினைப் பொருட்களும் உள்ளன என்று அர்த்தமாகும்.

இரண்டாவதாக NEGATIVE ஆன அர்த்தத்தில் பார்க்கும் பொழுது It means clever, especially in a dishonest or secret way என்று சொல்லலாம் அதாவது
புத்திசாலித்தனமான, குறிப்பாக நேர்மையற்ற அல்லது இரகசிய வழியில் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒருவர் தந்திரமாக வஞ்சக செயல் செய்யக்கூடியவராக இருக்கும் பொழுது அவரையும் இந்த CRAFTY என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.

எனவே She is very crafty or he is very crafty என்று சொல்லும் பொழுது அவள் மிகவும் தந்திரமானவள் அல்லது அவன் மிகவும் தந்திரமானவன் அல்லது புத்திசாலித்தனமாக வஞ்சக செயல் செய்யக்கூடியவன் என்ற அர்த்தமும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எனவே நண்பர்களே! கைவினை பொருட்கள் செய்யக்கூடிய ஒருவரை அல்லது கை வேலை செய்வதில் ஆர்வம் கொண்ட ஒருவரை she is very crafty or he is very crafty என்று சொல்லும் பொழுது பாசிட்டிவாகவும்  கைவினை பொருட்கள் செய்யாத ஒருவரை she is very crafty or he is very crafty என்று சொல்லும் பொழுது நெகட்டிவாகவும் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
She is very crafty. All the decorations were done by her alone.
அவள் கைவினைப் பொருட்கள்  செய்வதில் மிகவும் ஆர்வமானவள்.  அனைத்து அலங்காரங்களும் அவளால் மட்டுமே செய்யப்பட்டன.

He is very crafty. He cheated many people.
அவர் மிகவும் தந்திரமானவர். அவர் பலரை ஏமாற்றி விட்டார்.

Practice it
எனவே நண்பர்களே! CRAFTY என்ற இந்த வார்த்தையை நீங்களும்  பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...