Know the word DISCOMFIT...
Word of the day is DISCOMFIT...
/dɪˈskʌm.fɪt/
Function
The word DISCOMFIT is a verb.
Meaning
It means to make someone feel uncomfortable, especially mentally என்று சொல்லலாம் அதாவது ஒருவரை மனதளவில் சங்கடப்படுத்துவது என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு பொது இடத்தில் பலபேர் முன்னிலையில் ஒருவர் மற்றொருவரை அவமானப்படுத்தும் பொழுது அந்த அவமானப்படுத்தப்பட்ட நபருக்கு மனதளவில் ஒரு கஷ்டமான அல்லது மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலை உருவாகும். அப்படித்தானே? எனவே அந்த நபரால் அந்த இடத்துல அதற்கு மேல தொடர்ந்து இருக்கவே முடியாது. அதனால் அந்த நபருக்கு அந்த இடத்தை விட்டே ஓடிப் போய்விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் கூட உருவாகிவிடும். அப்படித்தானே?
இவ்வாறாக ஒரு நபர் அசிங்கப்படுத்தப்படும் போது அவமானப்படுத்தப்படும் பொழுது நோகடிக்கப்படும் பொழுது இந்த DISCOMFIT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
ஒரு காலத்தில் இந்த DISCOMFIT என்ற இந்த வார்த்தையானது ஒரு படை முற்றிலுமாக தோற்கடிக்கப்படுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த வார்த்தையானது ஒரு நபர் முற்றிலுமாக நோகடிக்கப்படுதல் அல்லது அசிங்கப்படுத்தப்படுதல் அல்லது அவமானப்படுத்தப்படுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எனவே தமிழில் நோகடித்தல் அல்லது அசிங்கப்படுத்துதல் அல்லது அவமானப்படுத்துதல் போன்ற அர்த்தங்களில் DISCOMFIT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
They tried to discomfit her but they did not succeed.
அவர்கள் அவளை நோகடிக்க முயன்றனர், ஆனால் அவர்கள் வெற்றிபெறவில்லை.
If you discomfit someone, you will be discomfited by somebody else.
நீங்கள் ஒருவரைத் அசிங்கப்படுத்தினால், நீங்கள் வேறு ஒருவரால் அசிங்கப்படுத்தப்படுவீர்கள்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் நோகடித்தல் அல்லது அசிங்கப்படுத்துதல் அல்லது அவமானப்படுத்துதல் போன்ற அர்த்தங்களில் DISCOMFIT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக