Know the word FABULOUS...
Word of the day is FABULOUS...
/ˈfæb.jə.ləs/
Function
The word FABULOUS is an adjective.
Note
The word FABULOUS has two meanings.
Meaning
முதலாவதாக It means very good or excellent என்று சொல்லலாம் அதாவது மிகவும் நன்றாக அல்லது அருமையாக என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு விஷயம் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கும் பொழுது, அனுபவிப்பதற்கு அருமையாக இருக்கும் பொழுது, மனதிற்கு இனிமையாக இருக்கும் பொழுது உள்ளத்திற்கு சந்தோஷத்தை தருவதாக அமையும் பொழுது, மனது விரும்பக் கூடியதாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே FABULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக ஒருவர் அணிந்த ஆடை உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும்போது அந்த இடத்திலே FABULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அதைப்போலவே நீங்கள் உண்ட உணவு மிகவும் அருமையாக மிகவும் சுவையாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே FABULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அதைப்போலவே நீங்கள் நண்பர்களுடன் குடும்பத்துடன் உறவினர்களுடன் சென்ற ஒரு சுற்று விழா மிகவும் ஆனந்தமாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே FABULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் போது தமிழில் மிகவும் அருமையான, மிகவும் நன்றாக, மிகவும் சுவையான, மிகவும் இனிமையான, அற்புதமான போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
இரண்டாவதாக It means imaginary, not existing in real life என்று சொல்லலாம் அதாவது கற்பனையான, நிஜ வாழ்க்கையில் இல்லாத என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! படங்களில், கற்பனைக் கதைகளில், உண்மையற்ற கற்பனையான கதாபாத்திரங்களை அல்லது உயிரினங்களை விவரிக்கும் பொழுது அந்த இடத்திலே FABULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக
Unicorns - ஒற்றைக் கொம்பு கொண்ட குதிரை போன்ற வடிவில் இருக்கும் விலங்கு.
dragons - பறக்கும் நாகம் அல்லது இறக்கையுள்ள முதலை போன்ற விலங்கு.
feathered snakes - இறக்கையுள்ள பாம்பு.
போன்ற கற்பனையான கதாபாத்திரங்களை விவரிக்கும் பொழுது அவற்றையும் இந்த FABULOUS என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.
எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் போது தமிழில் நம்பத்தகாத அல்லது மிகைப்படுத்தப்பட்ட அல்லது கற்பனையான போன்ற அர்த்தங்களில் இந்த FABULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
Your dress is fabulous.
உனது ஆடை மிகவும் அருமையாக இருக்கிறது.
The movie is full of fabulous creatures.
மிகைப்படுத்தப்பட்ட உயிரினங்கள் நிறைந்த படம்.
Practice it
எனவே நண்பர்களே! இந்த அர்த்தங்களில் இந்த FABULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக