Know the word GAINSAY...

Word of the day is GAINSAY...
Pronunciation
/ˌɡeɪnˈseɪ/

Function
The word GAINSAY is a verb 

Meaning
It means to refuse to accept something as the truth என்று சொல்லலாம் அதாவது ஏதாவதொன்றை உண்மை என்று ஏற்க மறுப்பது என்று அர்த்தம்.
 
அதாவது நண்பர்களே! ஒருவர் நம்மைப் பற்றியோ அல்லது பிறரை பற்றியோ அல்லது ஏதாவது ஒன்றைப் பற்றியோ சொல்லும் ஒரு கருத்தை நாம் ஏற்க மறுக்கும் பொழுது அல்லது அதற்கு முரண்பட்டு பேசும்பொழுது அந்த இடத்திலே இந்த GAINSAY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒருவர் யார் என்ன சொன்னாலும் அதற்கு பதிலாக நீ சொல்வது தப்பு,  நீ சொல்வது உண்மை இல்லை என்று சொல்வார் என்றால் அந்த இடத்திலே அவர் செய்யும் அந்த செயலை இந்த GAINSAY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி சொல்லலாம்.

பொதுவாக நாம் சாதாரணமாக பேசும் பொழுது ஒருவர் சொல்லும் கருத்தை ஏற்க மறுக்கும் பொழுது அந்த இடத்திலே DENY அல்லது DISAGREE போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவோம் அந்த இடத்திலே இந்த GAINSAY என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் நண்பர்களே! இந்த GAINSAY என்ற இந்த வார்த்தையானது SAY AGAINST என்ற வார்த்தையிலிருந்து உருவான ஒரு வார்த்தையாகும்.

எனவே தமிழில் மறுத்தல் அல்லது ஏற்க மறுத்தல் என்ற அர்த்தத்தில் இந்த GAINSAY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Certainly there is no gainsaying that he is a brilliant.
நிச்சயமாக அவர் ஒரு புத்திசாலி என்பதை மறுப்பதற்கில்லை.

At home no one dares gainsay what my dad says.
வீட்டில் என் அப்பா சொல்வதை யாரும் ஏற்க மறுக்க மாட்டார்கள்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் மறுத்தல் அல்லது ஏற்க மறுத்தல் என்ற அர்த்தத்தில் இந்த GAINSAY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...