Know the word GROWL...
Word of the day is GROWL...
/ɡraʊl/
Function
The word GROWL is a verb.
Meaning
It means to make a low, rough sound, usually in anger என்று சொல்லலாம் அதாவது பொதுவாக கோபத்தில் குறைந்த சத்தத்தில் கரடுமுரடான ஒலியை எழுப்புதல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இரண்டு நாய்கள் சண்டை போடும் பொழுது கோபத்தில் ஒன்றை மற்றொன்று பார்த்து உர்ர்ர்ர் என்று சத்தத்தை எழுப்பும். அந்த சத்தத்தை தான் இந்த GROWL என்ற இந்த வார்த்தை குறிக்கிறது.
ஒரு நாயானது அறிமுகமாகாத ஒரு மனிதனைப் பார்த்து இவ்வாறு சத்தத்தை எழுப்பும் பொழுது 'பக்கத்தில் வராதே, ஓடிப் போய்விடு" என்ற அர்த்தத்தைக் கொண்டதாக இருக்கிறது.
இவ்வாறாக ஒரு மனிதன் கோபத்தில் இருக்கும் பொழுது மற்றொரு மனிதன் மீது சத்தமிடும் பொழுது அந்த சத்தத்தை கூட இந்த GROWL எந்த இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
நாம் தமிழில் கூட ஒரு மனிதன் கோபத்தில் இன்னொரு மனிதன் மீது அதிக சத்தத்தில் திட்டும் பொழுது "நாய் போல கத்துகிறான்" என்று சொல்லுவோம் அந்த இடத்தில் இந்த GROWL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் உறுமுதல் அல்லது நாய் போல கத்துதல் என்ற அர்த்தத்தில் GROWL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The moment the dog growled at her, she ran away from the place.
நாய் அவளைப் பார்த்து உறுமிய நொடியில், அவள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.
He always growls at others.
அவன் எப்பொழுதும் அடுத்தவரை பார்த்து நாய் போல கத்துவான்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் உறுமுதல் அல்லது நாய் போல கத்துதல் என்ற அர்த்தத்தில் GROWL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக