Know the word HENCEFORTH...
Word of the day is HENCEFORTH...
/ˌhensˈfɔːθ/
Function
The word HENCEFORTH is an adverb.
Meaning
It means starting from this time என்று சொல்லலாம் அதாவது இந்த நேரம் முதல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! புதிதாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு இந்த நேரத்திலிருந்து செயல்பட ஆரம்பிக்கிறது என்று பேசும் பொழுது அந்த இடத்திலே இந்த HENCEFORTH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒரு அலுவலகத்தில் பணி புரியும் பணியாட்கள் மதிய உணவு இடைவேளையின் போது அலுவலகத்தை விட்டு வெளியே சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் அலுவலகத்துக்கு பணிக்கு திரும்புவது ஒரு வழக்கமாக இருந்து கொண்டிருக்கும் பொழுது அந்த வழக்கத்தை மாற்றும் விதமாக ஒரு முடிவு எடுக்கப்பட்டு இன்றிலிருந்து யாரும் மதிய உணவு இடைவேளையின்போது மதிய உணவு சாப்பிட வெளியே செல்ல கூடாது என்று அந்த முடிவை சொல்லும் பொழுது அந்த இடத்திலே HENCEFORTH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி அந்த முடிவை சொல்லலாம்.
மேலும் நண்பர்களே! இந்த HENCEFORTH என்ற இந்த வார்த்தைக்கு பதிலாக HENCEFORWARD என்ற வார்த்தையையும் பயன்படுத்தலாம் இரண்டுமே ஒரே அர்த்தம் தான்.
எனவே தமிழில் இந்த நேரம் முதல் அல்லது இந்த நேரத்திலிருந்து அல்லது இனிமேல் போன்ற அர்த்தங்களில் இந்த HENCEFORTH மற்றும் HENCEFORWARD என்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம்.
In a sentence
Henceforth we will not go out during lunch break.
இனிமேல் மதிய உணவு இடைவேளையில் வெளியே செல்ல மாட்டோம்.
Henceforward this bike belongs to me.
இந்த நேரம் முதல் இந்த பைக்கானது என்னுடையது.
Practice it
எனவே நண்பர்களே! இந்த நேரம் முதல் அல்லது இந்த நேரத்திலிருந்து அல்லது இனிமேல் போன்ற அர்த்தங்களில் இந்த HENCEFORTH மற்றும் HENCEFORWARD என்ற வார்த்தைகளை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக