Know the word HUMDRUM...

Word of the day is HUMDRUM...
Pronunciation
/ˈhʌm.drʌm/

Function
The word HUMDRUM can be used as adjective and noun.

Meaning
It means having no excitement, interest, or new and different events என்று சொல்லலாம் அதாவது உற்சாகம், ஆர்வம் அல்லது புதிய மற்றும் வேறுபட்ட நிகழ்வுகள் இல்லாத என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு சிலருக்கு சவால் என்றால் ரொம்ப பிடிக்கும், சவால்கள் நிறைந்த வாழ்க்கை ரொம்ப பிடிக்கும் அதனால் ஒவ்வொரு சவால்களும் வரும்பொழுது அதனை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் எதிர் கொள்வார்கள்.

அதேநேரத்தில் ஒருவருடைய வாழ்க்கையில் எந்தவித சவாலும் இல்லாமல் இருக்கும் பொழுது அங்கே உற்சாகம் குறைந்து விடும் ஆர்வம் குறைந்து விடும் அதனால் வாழ்க்கை சலிப்பு தட்ட ஆரம்பித்துவிடும்.

அதைப்போலவே நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சி எந்தவித உற்சாகமும் இல்லாமல், பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமையாமல், ஆர்வத்தை தூண்டாமல், வழக்கம்போல இருப்பது போலவே ஒரே மாதிரியாக இருக்கும் பொழுது அந்த நிகழ்ச்சி சலிப்பு தட்டிவிடும்.

இவ்வாறாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையோ அல்லது ஒரு நிகழ்ச்சியோ உற்சாகம் இல்லாததாக ஆர்வமில்லாததாக சலிப்பு தட்ட கூடியதாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த HUMDRUM என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் சலிப்பு, சலிப்பான, சலிப்பு நிறைந்த, சுவையற்ற, உற்சாகமில்லாத போன்ற அர்த்தங்களில் இந்த HUMDRUM என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
I am tired of this humdrum daily routine.
இந்த உற்சாகமில்லாத தினசரி வழக்கத்தால் நான் சோர்வாக இருக்கிறேன்.

The movie was so humdrum that I slept throughout it.
படம் முழுக்க தூங்கும் அளவுக்கு படமானது சலிப்பாக இருந்தது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் சலிப்பு, சலிப்பான, சலிப்பு நிறைந்த, சுவையற்ற, உற்சாகமில்லாத போன்ற அர்த்தங்களில் இந்த HUMDRUM என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...