Know the word INCUMBENT...

Word of the day is INCUMBENT...
Pronunciation
/ɪnˈkʌm.bənt/

Function
The word INCUMBENT can be used as adjective and noun.

Note
INCUMBENT என்ற இந்த வார்த்தையை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

Meaning
முதலாவதாக It means officially having the named position என்று சொல்லலாம் அதாவது பேர் கொண்ட பதவியை அதிகாரப்பூர்வமாக கொண்டுள்ள என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த INCUMBENT என்ற இந்த வார்த்தையானது பதவியில் இருக்கின்ற அல்லது பதவியில் இருக்கும் என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த INCUMBENT என்ற இந்த வார்த்தையை ஒரு அலுவலகத்தில் இருக்கும் எந்த ஒரு பதவியையும் குறிக்க பயன்படுத்தலாம். ஆனாலும்  INCUMBENT என்ற இந்த வார்த்தையானது ஓட்டு போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் பதவியை குறிக்க அதிக அளவில்  பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக The incumbent president என்று சொல்லும் பொழுது பதவியில் இருக்கும் ஜனாதிபதி என்று அர்த்தம். The incumbent manager என்று சொல்லும் பொழுது பதவியில் இருக்கும் மேலாளர் என்று அர்த்தம். The incumbent headmaster என்று சொல்லும் பொழுது பதவியில் இருக்கும்  தலைமை ஆசிரியர் என்று அர்த்தம்.

எனவே இந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது NOUN ஆகவும் பயன்படுத்தலாம் ADJECTIVE ஆகவும் பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் NOUN ஆக பயன்படுத்தும் பொழுது பதவியில் இருப்பவர் அல்லது பொறுப்பில் இருப்பவர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும் அதே நேரத்தில் ADJECTIVE ஆக பயன்படுத்தும் பொழுது பதவியில் இருக்கும் அல்லது பதவியில் இருக்கின்ற அல்லது பொறுப்பில் இருக்கும் அல்லது பொறுப்பில் இருக்கின்ற என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக It means Imposed on someone as an obligation, especially due to one's office என்று சொல்லலாம் அதாவது ஒருவரின் அலுவலகம் காரணமாக அவரின் மீது சுமத்தப்பட்ட ஒரு கடமை என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒருவருக்கு பதவி என்று ஒன்று கொடுக்கப்படும் பொழுது அந்த பதவி சார்ந்த பொறுப்புகள் மற்றும் கடமைகள் என்று ஒன்று இருக்கும். அப்படித்தானே?

இவ்வாறு ஒருவருக்கு பதவி சார்ந்த பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் இருக்கும்பொழுது அந்த பொறுப்பையோ அல்லது அந்த கடமையையோ குறிக்கும் இடத்திலும் இந்த INCUMBENT என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் பொறுப்பு அல்லது கடமை என்ற அர்த்தத்தில் இந்த INCUMBENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது ADJECTIVE ஆக பயன்படுத்த வேண்டும்.

In a sentence
If the present incumbent governor resigns, it will take at least another two months to appoint a new one.
தற்போது பதவியில் இருக்கும் ஆளுநர் பதவி விலகினால், புதியவரை நியமிக்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும்.

It is incumbent upon the teacher to treat all the students equally.
அனைத்து மாணவர்களையும் சமமாக நடத்துவது ஆசிரியரின் கடமை.

Practice it
எனவே நண்பர்களே! இந்த INCUMBENT என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...