Know the word INDEBTED...
Word of the day is INDEBTED...
/ɪnˈdet̬.ɪd/
Function
The word INDEBTED is an adjective.
Meaning
It means grateful because of help given என்று சொல்லலாம் அதாவது கொடுக்கப்பட்ட உதவிக்கு நன்றி உள்ளவராக இருத்தல் என்று அர்த்தம்.
நண்பர்களே! இந்த INDEBTED என்ற இந்த வார்த்தைக்கு தமிழில் கடன்பட்டிருத்தல் அல்லது கடமைப்பட்டிருத்தல் என்ற வார்த்தைகளை அர்த்தமாக கொள்ளலாம்.
மேலும் கடன்பட்டிருத்தல் அல்லது கடமைப்பட்டிருத்தல் என்ற இந்த வார்த்தையை இரண்டு விதங்களில் நாம் பயன்படுத்துவோம்.
முதலாவதாக நமக்கு நன்கு தெரிந்த ஒருவர் நமக்கு பணம் கொடுத்து உதவி செய்யும் பொழுது அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கு கடன்பட்டிருத்தல் அல்லது கடமைப்பட்டிருத்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துவோம்.
இரண்டாவதாக ஒருவர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்கு உதவி செய்யும்போது அவர் செய்த அந்த உதவியை அவருக்கு திருப்பி செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கும் பொழுது அந்த இடத்திலேயும் கடன்பட்டிருத்தல் அல்லது கடமைப்பட்டிருத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.
இவ்வாறாக INDEBTED என்ற இந்த வார்த்தையை தமிழில் கடன்பட்டிருத்தல் அல்லது கடமைப்பட்டிருத்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
மேலும் இந்த INDEBTED என்ற இந்த வார்த்தையை ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது அந்த INDEBTED வார்த்தையை தொடர்ந்து TO என்ற PREPOSITION ஐ பயன்படுத்த வேண்டும்.
In a sentence
I am indebted to all my subscribers especially those who take some time to comment.
எனது சப்ஸ்கிரைபர்ஸ் அனைவருக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன் அதிலும் சிறந்த விதமாக சிறிது நேரம் ஒதுக்கி கமெண்ட் செய்பவர்களுக்கு.
I am deeply indebted to my family members and friends for their love and support.
எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் அன்பு மற்றும் ஆதரவிற்காக நான் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் கடன்பட்டிருத்தல் அல்லது கடமைப்பட்டிருத்தல் போன்ற அர்த்தங்களில் இந்த INDEBTED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக