Know the word INELUCTABLE...
Word of the day is INELUCTABLE...
/ˌɪn.ɪˈlʌk.tə.bəl/
Function
The word INELUCTABLE is an adjective.
Meaning
It means impossible to avoid என்று சொல்லலாம் அதாவது தவிர்க்க இயலாத என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த INELUCTABLE என்ற இந்த வார்த்தையானது ஒரு முடிவை தவிர்க்க முடியாது என்று சொல்லப்படுகின்ற இடத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு வார்த்தையாகும்.
எடுத்துக்காட்டாக இந்த வார்த்தையானது INELUCTABLE FATE அல்லது INELUCTABLE CONCLUSION அல்லது INELUCTABLE DESTINY என்று அதிக அளவில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் அதனுடைய அர்த்தம் என்னவென்றால் தவிர்க்க முடியாத முடிவு என்று அர்த்தம்.
மேலும் இந்த INELUCTABLE என்ற இந்த வார்த்தையானது பேசும் பொழுது அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை விட எழுதும் பொழுது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
தமிழில் தவிர்க்க முடியாத அல்லது தவிர்க்க இயலாத என்ற அர்த்தத்தில் இந்த INELUCTABLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
If you eat too much, it is ineluctable that you will put on weight.
நீ அதிகமாக சாப்பிட்டால், உனது உடல் எடை கூடும் என்பதை தவிர்க்க முடியாது.
It is ineluctable that we all have to die one day.
நாம் அனைவரும் ஒரு நாள் இறக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் தவிர்க்க முடியாத அல்லது தவிர்க்க இயலாத என்ற அர்த்தத்தில் இந்த INELUCTABLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக