Know the word RESOLUTE...

Word of the day is RESOLUTE...
Pronunciation
/ˈrez.ə.luːt/

Function
The word RESOLUTE is an adjective.

Meaning
It means determined in character, action, or ideas என்று சொல்லலாம் அதாவது தீர்மானமான குணம், செயல் அல்லது யோசனை கொண்ட என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு, தீர்மானமான எண்ணத்தோடு செயல்படுகிற ஒரு நபரை இந்த RESOLUTE அப்படிங்கிற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம்.

இப்படிபட்டவர்கள் இவர்களது திட்டத்திற்கு அல்லது நோக்கத்திற்கு இடைஞ்சலாக அல்லது தடையாக எதுவும் வராதபடி பார்த்துக் கொள்வார்கள். அப்படியே தடைகள் வந்தாலும் அந்த தடைகளை கடந்து அவர்களது குறிக்கோளை நோக்கி, அவர்களது திட்டத்தை நோக்கி தொடர்ந்து ஓடக்கூடியவர்களாக இருப்பார்கள்.

அதைப்போலவே ஒரு மனிதன் தீர்மானமான ஒரு முடிவை எடுக்கும் பொழுது அந்த முடிவை RESOLUTE DECISION என்று சொல்லலாம். 

அதைப்போலவே ஒரு உறுதியான முயற்சியை மேற்கொள்ளும் பொழுது அந்த முயற்சியை RESOLUTE EFFORT என்று சொல்லலாம்.

அதைப்போலவே தீர்மானமான அல்லது உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது அந்த நடவடிக்கைகளை  RESOLUTE STEPS அல்லது RESOLUTE ACTIONS என்று சொல்லலாம்.

அதைப்போலவே ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் பொழுது அந்த நிலைப்பாட்டை RESOLUTE STAND என்று சொல்லலாம்.

எனவே தமிழில் உறுதியான அல்லது தீர்மானமான அல்லது திடமான போன்ற அர்த்தங்களில் இந்த RESOLUTE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
You should take some resolute steps to overcome your temptations.
உனது சோதனையை ஜெயிக்க நீ சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

They made a resolute decision to win the match.
அவர்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியான முடிவை எடுத்தனர்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் உறுதியான அல்லது தீர்மானமான அல்லது திடமான போன்ற அர்த்தங்களில் இந்த RESOLUTE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...