Know the word STEALTHILY...
Word of the day is STEALTHILY...
/ˈstel.θəl.i/
Function
The word STEALTHILY is an adverb.
Meaning
It means quietly and carefully in order not to be seen or heard என்று சொல்லலாம் அதாவது பார்க்கவோ கேட்கவோ கூடாது என்பதற்காக அமைதியாகவும் கவனமாகவும் செயல்படுதல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த STEALTHILY என்ற இந்த வார்த்தையானது ஒரு செயலானது இரகசியமாக, திருட்டுத்தனமாக யாரும் அறியாத வகையில் நடைபெறும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தையாகும்.
எடுத்துக்காட்டாக ஒரு விலங்கு மற்றொரு விலங்கை வேட்டையாடும் பொழுது அந்த விலங்கிற்கு தெரியாமல் மெல்ல மெல்ல அதை நோக்கி நகருமிடத்தில் இந்த STEALTHILY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அதைப் போலவே ஒரு மனிதன் பிறர் கண்களுக்கு தப்பி யாரும் அறியாத வகையில் இரகசியமாக திருட்டுத்தனமாக ஒரு செயலை செய்யும் பொழுது STEALTHILY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அதைப் போலவே ஒரு கணினியினுள் ஒரு வைரஸ் நுழைந்து அங்கே உள்ள தகவல்களை இரகசியமாக திருட்டுத்தனமாக திருடுமிடத்தில் அல்லது அழிக்கும் இடத்தில் STEALTHILY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் இரகசியமாக அல்லது திருட்டுத்தனமாக என்ற அர்த்தத்தில் STEALTHILY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The tiger moved towards the deer stealthily.
புலியானது இரகசியமாக மானை நோக்கி நகர்ந்தது.
People's money is stealthily stolen from the bank.
மக்களின் பணமானது வங்கியிலிருந்து இரகசியமாக திருடப்பட்டிருக்கிறது.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் இரகசியமாக அல்லது திருட்டுத்தனமாக என்ற அர்த்தத்தில் STEALTHILY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக