Know the word STRAITJACKET...
Word of the day is STRAITJACKET...
/ˈstreɪtˌdʒæk.ɪt/
Function
The word STRAITJACKET can be used as noun and verb.
Meaning
It refers to a overgarment of strong material used to bind a violent prisoner or patient என்று சொல்லலாம் அதாவது மூர்க்க குணம் கொண்ட ஒரு கைதியை அல்லது ஒரு நோயாளியைக் கட்டுப்படுத்த வலுவான பொருளாலான ஒரு மேல் ஆடை என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஆபத்தானவர்களாகக் கருதப்படும் சிறைக்கைதிகள் மற்றும் நோயாளிகள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதைத் தடுக்கும் பொருட்டு அவர்கள் மீது அணியப்படும் நீண்ட கைப்பகுதிகளை உடைய மேல் ஆடையை குறிப்பதற்காக இந்த STRAITJACKET என்ற இந்த வார்த்தை பயன்படுத்தபடுகிறது.
STRAITJACKET என்ற இந்த வார்த்தையை STRAI(GH)TJACKET என்றும் எழுதலாம்.
எனவே தமிழில் வன்முறையாளரைக் கட்டுப்படுத்தும் புறச்சட்டை என்று இந்த STRAITJACKET என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
As soon as he was admitted in the hospital, he was straitjacketed.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே அவருக்கு வன்முறையாளரைக் கட்டுப்படுத்தும் புறச்சட்டை அணியப்பட்டது.
Usually the prisoners who have put on straitjacket try to free themselves from it.
பொதுவாக வன்முறையாளரைக் கட்டுப்படுத்தும் புறச்சட்டை அணியப்பட்ட கைதிகள் அதிலிருந்து அவர்களை விடுவித்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் வன்முறையாளரைக் கட்டுப்படுத்தும் புறச்சட்டை என்ற அர்த்தத்தில் இந்த STRAITJACKET என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக