Know the word TAKE AROUND...

Word of the day is TAKE AROUND...
Pronunciation
/teɪk əˈraʊnd/

Function
The word TAKE AROUND is a phrasal verb. எனவே இதனை VERB ஆக பயன்படுத்த வேண்டும்.

Meaning
It means to visit a place with someone, showing them the most interesting or important parts என்று சொல்லலாம் அதாவது யாராவது ஒருவருக்கு ஒரு இடத்தின் மிகவும் சுவாரசியமான அல்லது முக்கியமான பகுதிகளை காட்டுதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு நபர் ஒரு இடத்திற்கு புதிதாக வரும்போது அந்த இடத்தை சுற்றி பார்க்க விரும்புவார் மேலும் அந்த இடத்தில் உள்ள முக்கியமான மற்றும் சுவாரசியமான பகுதிகளை பார்க்க விரும்புவார். அப்படித்தானே!

அதைப்போலவே புதிதாக ஒரு நபர் நாம் வாழ்கின்ற இடத்திற்கு வரும் பொழுது நாம் வாழ்கின்ற இடத்தை சுற்றிக்காட்டுவதற்காக அவர்களை அழைத்துச் செல்வோம். அப்படித்தானே!

இவ்வாறாக ஒரு நபரை சுற்றிக்காட்டுவதற்காக அழைத்துச் செல்லும் பொழுது அந்த இடத்திலே இந்த TAKE AROUND என்ற இந்த PHRASAL VERB ஐ பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் சுற்றிக்காட்டுதல் அல்லது சுற்றிப்பார்க்க அழைத்து செல்லுதல் என்ற அர்த்தத்தில் TAKE AROUND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He wanted me to take him around Tamil Nadu.
அவர் என்னை அவருக்கு தமிழகத்தை சுற்றிக்காட்ட விரும்பினார்.

They will be taken around the college this afternoon.
அவர்கள் இன்று மதியம் கல்லூரியை சுற்றிப்பார்க்க அழைத்து செல்லப்படுவார்கள்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் சுற்றிக்காட்டுதல் அல்லது சுற்றிப்பார்க்க அழைத்து செல்லுதல் என்ற அர்த்தத்தில் TAKE AROUND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...