Know the word WHOPPING...

Word of the day is WHOPPING...
Pronunciation
/ˈwɑː.pɪŋ/

Function
The word WHOPPING is an adjective.

Meaning
It means extremely large என்று சொல்லலாம் அதாவது ரொம்ப ரொம்ப ரொம்ப பெரிய என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு விஷயம் அளவில் மிகவும் பெரியதாக இருக்கும் பொழுது அல்லது எண்ணிக்கையில் அதிக அளவில் இருக்கும் பொழுது இந்த WHOPPING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

ஒரு விஷயம் என்று சொல்லும் பொழுது அந்த விஷயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு பொருளாக இருக்கலாம் அல்லது ஒரு நபரின் எடையாக இருக்கலாம் அல்லது ஒருவருக்கு அடிபட்ட காயமாக இருக்கலாம் அல்லது ஒரு வெற்றியாக இருக்கலாம் அல்லது ஒரு தோல்வியாக இருக்கலாம் அல்லது ஒருவர் சொல்லும் பொய்யாக இருக்கலாம் அல்லது ஒருவருக்கு உயர்த்தப்பட்ட ஊதியமாக இருக்கலாம் அல்லது ஒருவர் அடித்த கோல்களின் எண்ணிக்கையாக இருக்கலாம்.

இவ்வாறு ஒரு விஷயம் ரொம்ப ரொம்ப ரொம்ப பெரியதாக இருக்கும் பொழுது அல்லது எண்ணிக்கையில் அதிக அளவில் இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த WHOPPING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் ரொம்ப ரொம்ப ரொம்ப பெரிய அல்லது மிகப் பெரிய அல்லது மிகவும் அதிக அளவில் என்ற அர்த்தத்தில் இந்த WHOPPING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
What a whopping lie is said by you!
எவ்ளோ பெரிய பொய் உன்னால் சொல்லப்பட்டிருக்கிறது!

Cristiano Ronaldo has scored a whopping 819 goals.
கிறிஸ்டியானோ ரொனால்டோ மிகவும் அதிக அளவில் 819 கோல்களை அடித்துள்ளார்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் ரொம்ப ரொம்ப ரொம்ப பெரிய அல்லது மிகப் பெரிய அல்லது மிகவும் அதிக அளவில் என்ற அர்த்தத்தில் இந்த WHOPPING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...