Superb 7 alternatives for DIE...

ALTERNATIVE VOCABS FOR THE WORD DIE
நண்பர்களே! இன்றைய பதிவில் DIE என்ற ஆங்கில வார்த்தைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைகளை பார்ப்போம்.

DIE என்ற வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைகள் நிறைய இருப்பினும் இந்த பதிவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஏழு ஆங்கில வார்த்தைகளை பார்ப்போம்.

முதலாவதாக KICK THE BUCKET என்ற IDIOM ஐ சொல்லலாம். இந்த IDIOM இல் உள்ள KICK என்ற வார்த்தையை VERB ஆக பயன்படுத்தி ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக You can do anything after I kicked the bucket என்று சொல்லலாம் அதாவது நான் இறந்த பிறகு நீ எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அர்த்தம்.

இரண்டாவதாக MEET YOUR MAKER என்ற EXPRESSION ஐ சொல்லலாம். இந்த EXPRESSION இல் உள்ள MEET என்ற வார்த்தையை VERB ஆக பயன்படுத்தி ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக Have you planned to meet your maker? என்று சொல்லலாம் அதாவது உன்னை உருவாக்கியவரை சந்திக்க திட்டம் போட்டு விட்டாயா? என்று அர்த்தம் அதாவது சாவதற்கு திட்டம் போட்டு விட்டாயா? என்று அர்த்தம்.

மூன்றாவதாக SNUFF IT என்ற EXPRESSION ஐ சொல்லலாம். இந்த EXPRESSION இல் உள்ள SNUFF என்ற வார்த்தையை VERB ஆக பயன்படுத்தி ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக I heard that he snuffed it last month என்று சொல்லலாம் அதாவது அவர் போன மாதம் இறந்து விட்டதாக கேள்விப்பட்டேன் என்று அர்த்தம்.

நான்காவதாக POP OFF என்ற PHRASAL VERB ஐ சொல்லலாம். இதனை VERB ஆக ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக You will surely miss me after I pop off என்று சொல்லலாம் அதாவது நான் இறந்த பிறகு கட்டாயமாக எனது பிரிவால் நீ வாடுவாய் என்று அர்த்தம்.

ஐந்தாவதாக BUY THE FARM என்ற IDIOM ஐ சொல்லலாம். இந்த IDIOM இல் உள்ள BUY என்ற வார்த்தையை VERB ஆக பயன்படுத்தி ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக It seems that you want to buy the farm soon என்று சொல்லலாம் அதாவது நீ விரைவாக சாக விரும்புவது போல் தெரிகிறது என்று அர்த்தம்.

ஆறாவதாக KICK OFF என்ற PHRASAL VERB ஐ சொல்லலாம். இதனை VERB ஆக ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக He gave all his money to the poor before he kicked off என்று சொல்லலாம் அதாவது அவன் இறப்பதற்கு முன் தனது பணத்தையெல்லாம் ஏழைகளுக்குக் கொடுத்தார் என்று அர்த்தம்.

ஏழாவதாக PASS AWAY என்ற PHRASAL VERB ஐ சொல்லலாம். இதனை VERB ஆக ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக That was too early for him to pass away என்று சொல்லலாம் அதாவது அவன் சிறிது காலத்திலேயே இறந்து விட்டான் என்று அர்த்தம்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த வார்த்தைகளை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...