Know the idiom AN ARM AND A LEG...

AN ARM AND A LEG
Meaning
It means be extremely expensive என்று சொல்லலாம் அதாவது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கின்ற என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! நாம் காசு கொடுத்து வாங்குகின்ற ஒரு பொருள் நமக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப விலை உயர்ந்ததாக தெரியும் பொழுது அந்த இடத்திலே AN ARM AND A LEG என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

நாம் தமிழில் கூட சில இடங்களில் ஒரு பொருள் நமக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப விலை உயர்ந்ததாக தெரியும் பொழுது சொல்லுவோம் அதாவது "என் தலையை அடகு வைத்து தான் வாங்க வேண்டும் அல்லது என் கால் கையை விற்றுதான் வாங்க வேண்டும்" என்று அந்த இடத்திலே AN ARM AND A LEG என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

AN ARM AND A LEG என்ற இந்த IDIOM ஐ ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தும் போது அந்த வாக்கியத்தில் VERB ஆக COST அல்லது CHARGE போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி ஒரு வாக்கியத்தை அமைக்க வேண்டும்

தமிழில் எக்கச்சக்கமான விலை அல்லது கொள்ளை விலை அல்லது கையை காலை விற்றுதான் வாங்க வேண்டும் போன்ற அர்த்தங்களில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
This bridal gown cost her an arm and a leg.
இந்த மணமகள் ஆடையை அவள் எக்கச்சக்க விலைக்கு வாங்கினாள்.

Do not go to that restaurant. They will charge you an arm and a leg.
அந்த உணவகத்திற்கு செல்லாதே.  அவர்கள் கொள்ளை விலை வசூலிப்பார்கள்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த AN ARM AND A LEG என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...