Know the idiom CAN'T BOIL AN EGG...

Let's learn an idiom today...
The Idiom is CAN'T BOIL AN EGG.
Function
The idiom, CAN'T BOIL AN EGG should be used as a verb.

Meaning
It means to unable to cook even the simplest meal என்று சொல்லலாம் அதாவது எளிமையான உணவைக் கூட சமைக்க முடியாத என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒருவரிடம் சமைக்க தெரியுமா? என்று கேள்வி கேட்கும் பொழுது அதற்கு அவர் சாப்பிடத்தான் தெரியும் என்று நகைச்சுவையாக பதில் சொல்லும் பொழுது அந்த இடத்திலே CAN'T BOIL AN EGG என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

சமையலைப் பொருத்தவரையில் ஒருவர் ZERO வாக இருக்கும் பொழுது நாம் தமிழிலே "அவனுக்கு சுடு தண்ணி கூட வைக்க தெரியாது" என்று சொல்லுவோம் அந்த இடத்தில் தான் CAN'T BOIL AN EGG என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்த வேண்டும்.

மேலும் ஒருவருக்கு சுவையாக சமைக்க தெரியாத பொழுதும் அந்த இடத்திலும் கூட CAN'T BOIL AN EGG என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் சமைக்கவே தெரியாத என்ற அர்த்தத்தில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
He can't boil an egg.
அவனுக்கு சமைக்கவே தெரியாது.

Last year she couldn't boil an egg but now she cooks well.
கடந்த வருடம் அவளுக்கு எதுவுமே சமைக்க தெரியவில்லை ஆனால் இப்பொழுது அவள் நன்றாக சமைக்கிறாள்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த CAN'T BOIL AN EGG என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்கள்.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...