know the idiom LAY A FINGER ON SOMEONE...

LAY A FINGER ON SOMEONE meaning...
Function
The idiom, LAY A FINGER ON SOMEONE is used in a sentence using LAY as a verb.

Meaning
It means to harm someone even slightly என்று சொல்லலாம் அதாவது யாராவதொருவருக்கு மிகவும் கொஞ்சமாக தீங்கு செய்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! நாம் தமிழில் பிறரோடு சண்டையிடும் பொழுது அல்லது சவால்கள் செய்யும் பொழுது சொல்லுவோம், "அவன் மேல் உன்னுடைய நுனிவிரல் பட்டால் கூட நான் உன்னை சும்மா விட மாட்டேன்" என்று, அந்த இடத்தில் பயன்படுத்த வேண்டிய IDIOM தான் இந்த LAY A FINGER ON SOMEONE.

மேலும் இந்த IDIOM ஐ ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது இந்த IDIOM இல் உள்ள SOMEONE என்ற வார்த்தைக்கு பதிலாக OBJECT PRONOUN ( ME, US, YOU, HIM, HER, IT and THEM ) ஐ பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் நுனி விரலால் தீங்கு செய்தல் அல்லது நுனிவிரல் பட்டால் கூட போன்ற அர்த்தத்தில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
Do not try to lay a finger on her. You will feel sorry for it later.
அவள் மீது நுனி விரலைக்கூட வைக்க முயற்சிக்காதே.  நீ அதற்காக பின்னர் வருத்தப்படுவாய்.

Don't you dare lay a finger on me.
என்மேல் நுனி விரலைக் கூட வைக்கத் நீ துணியாதே.

Practice it
எனவே நண்பர்களே! இந்த LAY A FINGER ON SOMEONE என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்கள்.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...