Know the idiom LEAVE NO STONE UNTURNED...

Know the idiom LEAVE NO STONE UNTURNED...
Function
The idiom, LEAVE NO STONE UNTURNED is used in a sentence using LEAVE as a verb.

Meaning
It means to do everything in order to achieve a good result என்று சொல்லலாம் அதாவது ஒரு நல்ல முடிவை அடைய எல்லாவற்றையும் செய்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த LEAVE NO STONE UNTURNED என்ற இந்த IDIOM ஆனது ஒரு நபர் ஒரு இலக்கை அடைவதற்காக சாத்தியமான எல்லா முயற்சியையும் மிகவும் கவனமாக மேற்கொள்ளும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு IDIOM ஆகும்.

மேலும் இந்த IDIOM ஆனது எல்லா முயற்சியையும் மேற்கொண்டு ஒரு இலக்கை அடைய முயற்சி செய்கின்ற ஒரு நபரை புகழ்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனத்தின் மேலாளர் அந்த நிறுவனத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு புத்தகத்தை எழுதுபவர் அந்த புத்தகத்தை எழுதுவதற்காக பல தரவுகளை தேடி; பல இடங்களுக்கு அலைந்து, பல புத்தகங்களை ஆராய்ந்து எழுதும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு இடத்தில் வசிக்கும் மக்களிடையே அமைதியை, ஒற்றுமையை நிலை நாட்டுவதற்காக ஒருவர் பல முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது   
அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.

இவ்வாறாக ஒரு மனிதன் ஒரு இலக்கை அடைவதற்காக சாத்தியமான எல்லா முயற்சியையும் மேற்கொள்ளும் பொழுது அந்த இடத்திலே இந்த LEAVE NO STONE UNTURNED என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் இலக்கை அடைய எதை வேண்டுமானாலும் செய்தல் அல்லது இலக்கை அடைய எல்லாவற்றையும் செய்தல் அல்லது இலக்கை அடைய எல்லா முயற்சியையும் மேற்கொள்ளுதல் போன்ற அர்த்தங்களில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
He left no stone unturned to bring unity among the people.
மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த அவர் எல்லாவற்றையும் செய்தார்.

He left no stone unturned to write this book.
அவர் இந்த புத்தகத்தை எழுத எல்லா முயற்சியையும் மேற்கொண்டார்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த LEAVE NO STONE UNTURNED என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...