Know the idiom ON ALL FOURS...

ON ALL FOURS
Function
The idiom ON ALL FOURS is used as an adverb in a sentence.

Meaning
It means on hands and knees on the ground என்று சொல்லலாம் அதாவது கைகள் மற்றும் முழங்கால்களால் தரையில் இருத்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! பொதுவாக குழந்தைகள் நடைபழகுவதற்கு முந்திய நிலையில் கைகள் மற்றும் கால்களால் தவழ்ந்து பழகுவார்கள். அப்படித்தானே? அவ்வாறாக குழந்தைகள், கைகள் மற்றும் கால்களால் தவழ்ந்து செல்வதற்கு ஆங்கிலத்தில் CRAWL என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இந்த CRAWL என்ற வார்த்தையினுடைய அர்த்தமான தவழ்ந்து செல்லுதல் என்கிற அதே அர்த்தத்தில் இந்த ON ALL FOURS என்ற IDIOM ஆனது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த ON ALL FOURS என்ற இந்த IDIOM ஆனது பெரும்பாலும் குழந்தைகள் தவழ்ந்து செல்கிற இடத்தில் பயன்படுத்தப்படுவதில்லை மாறாக பெரியவர்கள் கீழே குனிந்து கைகள் மட்டும் கால்களால் தரையில் தவழ்ந்து வேலை செய்கிற இடத்தில் அல்லது கைகள் மற்றும் கால்களால் நின்று குழந்தைகளுடன் விளையாடுகிற இடத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இந்த IDIOM ஆனது ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தப்படும் பொழுது GET DOWN என்ற PHRASAL VERB உடன் இணைத்தே பயன்படுத்தப்படுகிறது.

எனவே தமிழில் கை மற்றும் கால்களால் தவழ்ந்து அல்லது கை மற்றும் கால்களால் ஊந்து என்ற அர்த்தத்தில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
He got down on all fours to clean under the table.
அவன் மேஜைக்கு அடியில் கை மற்றும் கால்களால் தவழ்ந்து சுத்தம் செய்தான்.

He got down on all fours to play with his grandson.
அவர் தனது பேரனுடன் கை மற்றும் கால்களால் தவழ்ந்து விளையாடினார்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த ON ALL FOURS என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...