Know the phrasal verb LAY OFF...

Word of the day is LAY OFF...
Pronunciation
/leɪ ɑːf/

Function
The word LAY OFF is a phrasal verb and it is used as verb.

Note
LAY OFF என்ற இந்த phrase ஐ இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

Meaning
முதலாவதாக It means to stop employing someone என்று சொல்லலாம் அதாவது யாராவதொருவரை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு நிறுவனமானது பணியில் இருக்கும் பணியாட்களுக்கு போதுமான வேலை இல்லை என்ற காரணத்தினால் பணியில் இருக்கும் பணியாட்களின் எண்ணிக்கையை குறைப்பது வழக்கம் இவ்வாறாக பணியாட்களின் எண்ணிக்கையை குறைக்கின்ற இடத்தில் இந்த LAY OFF என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் பணி நீக்கம் செய்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
The company has a plan to lay off at least forty workers.
குறைந்தபட்சம் நாற்பது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை நிறுவனம் கொண்டுள்ளது.

இரண்டாவதாக It means to stop doing something என்று சொல்லலாம் அதாவது எதையாவதொன்றை செய்வதை நிறுத்துதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு மனிதன் தனது உடல் நலன் அல்லது மனநலன் கருதி அல்லது பிறரது உடல் நலன் அல்லது மனநலன் கருதி தான் செய்யும் ஒரு செயலை அல்லது தவறான ஒரு பழக்கத்தை நிறுத்துகிற இடத்தில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற தவறான பழக்கத்தை கைவிடுதல் என்னும் இடத்தில் பயன்படுத்தலாம்.

மேலும் ஒருவரது உடல் நலன் கருதி காய்கறி அதிகமாக சாப்பிட வேண்டும் என்பதற்காக இறைச்சி சாப்பிடுதலை நிறுத்தும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.

மேலும் ஒருவரை தொந்தரவு செய்தல் அல்லது கேலி செய்தல் அல்லது கிண்டல் செய்தல் போன்ற தவறான செயல்களை நிறுத்துதல் என்னும் இடத்தில் பயன்படுத்தலாம்

எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் போது தமிழில் கைவிடுதல் அல்லது நிறுத்துதல்  அல்லது விட்டு விடுதல் என்னும் அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்

In a sentence
She was asked to lay off smoking.
அவள் புகைபிடிப்பதை விட்டுவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாள்.

You would better lay off teasing him.
நீ அவனை கிண்டல் செய்வதை நிறுத்துவது நல்லது.

Practice it
எனவே நண்பர்களே! LAY OFF என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...