Know the phrase NEW YEAR'S RESOLUTION...
Word of the day is NEW YEAR'S RESOLUTION...
/ˌnuː ˌjɪrz ˌrez.əˈluː.ʃən/
Function
The word NEW YEAR'S RESOLUTION is a noun.
மேலும் இதனை New Year resolution என்றும் சொல்லலாம்.
Meaning
It refers to a promise that one makes to oneself to start doing something good or stop doing something bad on the first day of the year என்று சொல்லலாம் அதாவது வருடத்தின் முதல் நாளில் நல்லதைச் செய்யத் தொடங்க அல்லது கெட்டதைச் செய்வதை நிறுத்த ஒருவர் செய்யும் வாக்குறுதி என்று அர்த்தம்.
நண்பர்களே! ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு புதிய தீர்மானம் எடுத்து அதனை சிறப்பாக செயல்படுத்துவது என்பது நமது வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த ஒரு நல்ல முயற்சியாக இருக்கும்.
இந்த புதிய தீர்மானமானது நல்ல விஷயம் ஒன்றை செய்ய தொடங்குவதாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் நம்மிடத்தில் காணப்படும் ஒரு குறையை நிறுத்துவதாக இருக்க வேண்டும்.
நல்ல விஷயங்கள் என்று சொல்லும் பொழுது அதிகாலையில் எழுவது, குறைந்தது ஒரு 10 நிமிடமாவது தியானம் செய்வது, குறைந்தது ஒரு அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது, உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்வது போன்ற விஷயங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
அதைப்போலவே உடலுக்கு மனதுக்கு நிம்மதியை தராத மேலும் கெடுதலை விளைவிக்கும் காரியங்களை கெட்ட விஷயங்களுக்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
எனவே நண்பர்களே! இந்த புதிய ஆண்டிலே குறைந்தது ஒரு நல்ல விஷயத்தை வளர்க்கவும் மேலும் குறைந்தது ஒரு கெட்ட விஷயத்தை நிறுத்தவும் தீர்மானம் எடுத்து இந்த ஆண்டிலே சிறப்பாக செயல்படுத்த முயற்சி செய்வோம்.
*உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்*
எனவே தமிழில் புத்தாண்டுக்கான தீர்மானம் அல்லது புத்தாண்டு தீர்மானம் போன்ற அர்த்தங்களில் இந்த NEW YEAR'S RESOLUTION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
My new year's resolution is to do more exercise everyday.
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதே எனது புத்தாண்டு தீர்மானம்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் புத்தாண்டுக்கான தீர்மானம் அல்லது புத்தாண்டு தீர்மானம் போன்ற அர்த்தங்களில் இந்த NEW YEAR'S RESOLUTION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக