Know the word ASCERTAIN...

Word of the day is ASCERTAIN...
Pronunciation
/ˌæs.ɚˈteɪn/

Function
The word ASCERTAIN is a verb.

Meaning
It means to find out something with certainty என்று சொல்லலாம் அதாவது எதையாவதொன்றை உறுதியாகக் கண்டுபிடித்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ASCERTAIN என்ற இந்த வார்த்தையானது ஒரு விஷயம் உண்மையா அல்லது பொய்யா, சரியா அல்லது தவறா என்று அதனுடைய உண்மை தன்மையை ஆராய்ந்து உறுதிபடுத்துகிற இடத்தில் பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை ஆகும்.

எடுத்துக்காட்டாக ஒரு தகவல் சொல்லப்படும் பொழுது அந்த தகவலின் உண்மை தன்மையை ஆராய்ந்து உறுதிப்படுத்துகிற இடத்தில் பயன்படுத்தலாம்.

அதைப்போலவே காவல்துறையானது ஒரு கொலை அல்லது கொள்ளையில் ஈடுபட்டவர்களாக பலபேர் மீது சந்தேகம் இருக்கும் பொழுது அவர்களில் உண்மையான குற்றவாளியை ஆராய்ந்து உறுதிப்படுத்துகிற இடத்தில் பயன்படுத்தலாம்.

இவ்வாறாக ஒரு விஷயத்தை குறித்து எந்தவித சந்தேகத்திற்கும் இடம் இல்லாதவாறு அதனுடைய உண்மை நிலையை உறுதிப்படுத்துகிற இடத்தில் ASCERTAIN என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் உறுதிப்படுத்துதல் அல்லது ஆராய்ந்தறிந்து கொள்ளுதல் அல்லது தெரிந்து கொள்ளுதல் அல்லது கண்டறிதல் போன்ற அர்த்தங்களில் ASCERTAIN என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

In a sentence
It is important to ascertain that nobody is here around.
இங்கே யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.

The police will soon ascertain the cause for the murder.
கொலைக்கான காரணத்தை போலீசார் விரைவில் கண்டறிந்தார்கள்.

Practice it
எனவே நண்பர்களே! ASCERTAIN என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...