Know the word ASTOUND...

Word of the day is ASTOUND...
Pronunciation
/əˈstaʊnd/

Function
The word ASTOUND is a verb.

Meaning
It means affect with wonder என்று சொல்லலாம் அதாவது ஆச்சரியத்தால் பாதிக்கபடுதல் என்று அர்த்தம்.
 
அதாவது நண்பர்களே! ஒரு விஷயத்தை பார்க்கும் பொழுதோ அல்லது கேட்கும் பொழுதோ அந்த விஷயமானது ஆச்சரியத்துடன் கூடிய திகைப்பை தரும்பொழுது அந்த இடத்திலே ASTOUND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு மாய வித்தைக்காரர் மாய வித்தை செய்யும் பொழுது நாம் இதற்கு முன் பார்த்திராத மேலும் நமது எதிர்பார்ப்பை மிஞ்சுகிற அளவிற்கு
மாய வித்தைகளை செய்யும் பொழுது அந்த இடத்திலே நமக்கு ஆச்சரியமும் இருக்கும் திகைப்பும் இருக்கும். அப்படித்தானே? அந்த இடத்தில் தான் ASTOUND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறாக ஒரு விஷயமானது ஆச்சரியத்தையும் திகைப்பையும் சேர்த்து தரும் பொழுது அந்த இடத்திலே இந்த ASTOUND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் வியப்பூட்டுதல் திகைப்பூட்டுதல் அதிர்ச்சி தருதல் போன்ற அர்த்தங்களில் இந்த ASTOUND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் ஆனால் அதே நேரத்தில் ஆச்சரியமும் அதில் கலந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

In a sentence
I was astounded to know that he could speak 10 languages.
அவருக்கு 10 மொழிகள் தெரியும் என்பதை அறிந்து நான் வியந்தேன்.

I was astounded to know that he was rejected.
அவர் நிராகரிக்கப்பட்டதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

Practice it
எனவே நண்பர்களே! ASTOUND என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...