Know the word COMMEMORATE...

Word of the day is COMMEMORATE...
Pronunciation
/kəˈmem·əˌreɪt/

Function
The word COMMEMORATE is a verb.

Meaning
It means to show honor to the memory of an important person or event in a special way என்று சொல்லலாம் அதாவது ஒரு முக்கியமான நபர் அல்லது ஒரு முக்கியமான நிகழ்விற்கு மரியாதை செலுத்தும் விதமாக சிறப்பாக நினைவு கூறுதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! எல்லோரும் போற்றும் படி ஒரு சிறப்பான செயல் செய்த ஒரு மனிதரை நினைவு கூறுகிற  இடத்தில் இந்த COMMEMORATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அந்த மனிதர் தான் வாழ்ந்த ஒரு சமூகத்திற்காக அல்லது தனது நாட்டிற்காக அல்லது இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்காக ஏதாவது ஒரு சிறப்பான செயல் செய்திருக்க வேண்டும்.

அதைப்போலவே ஒரு நாட்டின் அல்லது ஒரு சமூகத்தின் அல்லது ஒரு இடத்தின் ஒரு முக்கியமான நிகழ்வை நினைவு கூறுகிற இடத்திலும் இந்த COMMEMORATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அவ்வகையில் ஒன்றுதான் இன்றைய தினம் நாம் நினைவு கூறி கொண்டாடும் குடியரசு தினமாகும்.

*So Friends, I wish You all A Happy Republic Day*

அதாவது 1950 ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிறப்பாக நினைவு கூறுகிற நாள்.

எனவே தமிழில் நினைவு கூறுதல் அல்லது சிறப்பாக நினைவு கூறுதல்  அல்லது நினைவு கூறி கொண்டாடுதல் போன்ற அர்த்தங்களில் COMMEMORATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

In a sentence
They have a plan to commemorate the death anniversary of their leader.
அவர்கள் தங்கள் தலைவரின் நினைவு தினத்தை நினைவுகூரும் திட்டத்தை கொண்டுள்ளனர்.

Today India commemorates the 74th anniversary of the implementation of the constitution.
இன்று இந்தியா அரசியலமைப்பு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட 74 வது ஆண்டு நிறைவைக் நினைவு கூறி கொண்டாடுகிறது.

Practice it
எனவே நண்பர்களே! COMMEMORATE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...