Know the word DERACINATE...

Word of the day is DERACINATE...
Pronunciation
/dɪˈɹæsəneɪt/

Function
The word DERACINATE is a verb.

Meaning
It means to pull up by the roots என்று சொல்லலாம் அதாவது வேரோடு பிடுங்கி விடுதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த DERACINATE என்ற இந்த வார்த்தையை வேரோடு பிடுங்கி விடுதல் என்கிற அர்த்தத்தில் இரண்டு விதமாக பயன்படுத்தலாம்.

முதலாவதாக ஒரு மரத்தை அல்லது ஒரு செடியை அது இருக்கிற இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு வேரோடு பிடுங்கி நடுகிற இடத்தில் பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக உருவகமாக பயன்படுத்தலாம் அதாவது எவ்வாறு ஒரு செடியோ அல்லது மரமோ ஒரு இடத்திலிருந்து வேரோடு பிடுங்கி மற்றொரு இடத்தில் நடப்படுகிறதோ அதைப்போலவே ஒரு இடத்தில் வாழும் மக்களை ஏதாவதொரு காரணத்திற்காக அதாவது ஒரு போர் காரணமாகவோ அல்லது இயற்கை பேரிடர் காரணமாகவோ அல்லது அரசாங்கம் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்காகவோ பலவந்தமாக அவர்கள் வாழுமிடத்திலிருந்து வேறொரு இடத்தில் கட்டாயப்படுத்தி வாழ வைக்கிற இடத்தில் பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் வேரோடு பிடுங்கி விடுதல் அல்லது வலுக்கட்டாயமாக இடம் மாற்றுதல் போன்ற அர்த்தங்களில் DERACINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

In a sentence
You should deracinate this plant and put it in a sunnier place.
நீ இந்த செடியை வேரோடு பிடுங்கி, சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

The government has a plan to deracinate the locals in favour of the company.
நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளூர் மக்களை வலுக்கட்டாயமாக இடம் மாற்றும் திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளது.

Practice it
எனவே நண்பர்களே! DERACINATE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...