Know the word DILAPIDATED
Word of the day is DILAPIDATED...
/dɪˈlæp.ə.deɪ.t̬ɪd/
Function
The word DILAPIDATED is an adjective.
Meaning
It means old and in poor condition என்று சொல்லலாம் அதாவது பழைய மற்றும் மோசமான நிலையில் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு இடமோ அல்லது ஒரு பொருளோ ஒரு மனிதனின் அலட்சியத்தால் புறக்கணிக்கப்படும் பொழுது அந்த இடமோ அல்லது அந்த பொருளோ பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து மோசமான நிலையை அடைந்து விடும்.
இவ்வாறாக ஒரு இடமோ அல்லது ஒரு பொருளோ அல்லது ஒரு மனிதனின் ஆரோக்கியமோ அல்லது இரண்டு மனிதர்களுக்கிடையே உள்ள ஒரு நல் உறவோ ஒரு மனிதனின் அலட்சியத்தால் புறக்கணிக்கப்பட்டு மோசமான நிலையை அடையும் பொழுது அந்த இடத்திலே இந்த DILAPIDATED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
எனவே தமிழில் பாழடைந்த அல்லது பாழான அல்லது பழுதடைந்த அல்லது இடிந்த என்ற அர்த்தத்தில் இந்த DILAPIDATED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The bridge is dilapidated and so it is advised not to use it anymore.
பாலம் பழுதடைந்துள்ளதால், அதை இனி பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
If you do not take care of your health, your health will be dilapidated.
நீ உனது உடல் நலத்தில் அக்கறை காட்டாவிட்டால் உனது உடல் நலம் பாழடைந்துவிடும்.
Practice it
எனவே நண்பர்களே! DILAPIDATED என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக