Know the word EXCRUCIATING...

Word of the day is EXCRUCIATING...
Pronunciation
/ɪkˈskruː.ʃi.eɪ.t̬ɪŋ/

Function
The word EXCRUCIATING is an adjective.

Meaning
It means extremely painful என்று சொல்லலாம் அதாவது அதிகப்படியான வேதனையான என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு மனிதன் உடல் அளவிலோ அல்லது மனதளவிலோ அதிகப்படியான வேதனையை அல்லது வலியை அனுபவிக்கும் பொழுது அந்த இடத்திலே EXCRUCIATING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு மனிதனுக்கு உடலில் ஏற்பட்ட காயத்தினாலோ அல்லது எலும்பில் ஏற்பட்ட முறிவினாலோ அல்லது விபத்தில் ஏற்பட்ட அடியினாலோ அல்லது பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்ததாலோ உடலில் அதிகப்படியான வேதனையை அல்லது வலியை அனுபவிக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த EXCRUCIATING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே எதிர்பாராத ஒரு முடிவு அல்லது மிகவும் நெருங்கியவரின் பிரிவு அல்லது மிகவும் நெருங்கிய ஒருவரின் இழப்பு அல்லது நீண்ட நேரமாக காத்திருத்தல் அல்லது சலிப்பான நேரம் அல்லது சலிப்பான வாழ்க்கை போன்றவை ஒரு மனிதனுக்கு மனதளவில் அதிகப்படியான வேதனையை அல்லது வலியை தரும் எனவே அந்த இடத்திலும் இந்த EXCRUCIATING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் கடுமையான அல்லது கடும் வேதனையான அல்லது அதிகப்படியான துன்பம் தருகிற போன்ற அர்த்தங்களில் இந்த EXCRUCIATING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He was screaming due to excruciating pain.
அவன் கடுமையான வலியால் அலறி துடித்தான்.

Five hours of meeting caused him excruciating headache.
ஐந்து மணிநேரமாக நடந்த கூட்டம் அவனுக்கு கடுமையான தலைவலியை ஏற்படுத்தியது.

Practice it
எனவே நண்பர்களே! EXCRUCIATING என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...