Know the word GARRULOUS...

Word of the day is GARRULOUS...
Pronunciation
/ˈɡær.əl.əs/

Function
The word GARRULOUS is an adjective.

Meaning
It means annoyingly talkative என்று சொல்லலாம் அதாவது எரிச்சலூட்டும் வகையில் பேசுகின்ற என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு நபர் சிறிது நேரம் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் பொழுது அந்த நபரை TALKATIVE என்று சொல்லலாம்.

இந்த TALKATIVE என்ற இந்த வார்த்தையை ஒரு POSITIVE ஆன வார்த்தை என்றும் சொல்ல முடியாது அல்லது ஒரு NEGATIVE ஆன வார்த்தை என்றும் சொல்ல முடியாது ஆனால் ஒரு NEUTRAL ஆன வார்த்தை என்று சொல்லலாம்.

அதே நேரத்தில் ஒருவர் எந்தவித பயனோ அல்லது முக்கியமோ இல்லாத, யாருக்கும் விருப்பம் இல்லாத மேலும் எரிச்சலை தரக்கூடிய காரியங்களை குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் பொழுது அந்த இடத்தில் தான் இந்த GARRULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் எரிச்சலூட்டும் வகையில் பேசுகின்ற அல்லது சளசள வென்று பேசுகின்ற அல்லது சளசள வென்று பேசி எரிச்சலூட்டுகின்ற போன்ற அர்த்தங்களில் இந்த GARRULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
As he is garrulous, nobody likes to speak with him.
அவர் எரிச்சலூட்டும் வகையில் பேசுபவராக இருப்பதால், யாரும் அவருடன் பேச விரும்புவதில்லை.

The garrulous person in the train was asked to keep quiet.
ரயிலில் எரிச்சலூட்டும் வகையில் பேசிக்கொண்டிருந்த நபர் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

Practice it
எனவே நண்பர்களே! GARRULOUS என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...