Know the word HOMAGE...
Word of the day is HOMAGE...
/ˈhɑː.mɪdʒ/
Function
The word HOMAGE is a noun.
Meaning
It refers to an expression of great respect and honor என்று சொல்லலாம் அதாவது மிகுந்த மரியாதை மற்றும் மரியாதையின் வெளிப்பாடு என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த HOMAGE என்ற இந்த வார்த்தையை வணக்கம் அல்லது மிகுந்த மரியாதை அல்லது புகழுடன் மரியாதை அல்லது அஞ்சலி போன்ற தமிழ் அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக கடவுளுக்கு மிகுந்த மரியாதையாக வணக்கம் செலுத்தும் இடத்தில் பயன்படுத்தலாம்.
அடுத்ததாக ஒரு மனிதன் பிறக்கும் பொழுதே புகழோடு பிறக்கும் பொழுது அந்த மனிதனுக்கு மிகுந்த மரியாதை செலுத்தும் இடத்தில் பயன்படுத்தலாம் எடுத்துக்காட்டாக அரச குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள்.
அடுத்ததாக ஒரு மனிதன் செய்த சாதனையின் மூலமாக இந்த உலக மக்கள் பயன் பெறும் பொழுது அந்த மனிதனை புகழும் வகையில் மரியாதை செலுத்தும் பொழுது அந்த இடத்தில் பயன்படுத்தலாம்.
அடுத்ததாக இறந்த ஒரு மனிதனுக்கு மரியாதை செலுத்தும் பொழுது அந்த இடத்திலே அஞ்சலி செலுத்துதல் என்னும் அர்த்தத்தில் HOMAGE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அடுத்ததாக மிகுந்த மரியாதையுடன் போற்றப்படும் ஒரு நாட்டின் கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றை போற்றும் இடத்திலும் HOMAGE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இவ்வாறாக HOMAGE என்ற இந்த வார்த்தையை வணக்கம் அல்லது மிகுந்த மரியாதை அல்லது புகழுடன் மரியாதை அல்லது அஞ்சலி போன்ற தமிழ் அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
Note
மேலும் நண்பர்களே! இந்த HOMAGE என்ற இந்த வார்த்தையை TO PAY HOMAGE அல்லது TO DO HOMAGE அல்லது BOW IN HOMAGE அல்லது TO RENDER HOMAGE என்று ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும்.
In a sentence
People paid homage on seeing the king.
மன்னரைக் கண்டதும் மக்கள் வணக்கம் செலுத்தினார்கள்.
They wanted to pay homage to the great artist.
அவர்கள் மாபெரும் கலைஞருக்கு புகழுடன் மரியாதை செலுத்த விரும்பினர்.
Practice it
எனவே நண்பர்களே! HOMAGE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக