Know the word INDISPENSABLE...

Word of the day is INDISPENSABLE...
Pronunciation
/ˌɪn.dɪˈspen.sə.bəl/

Function
The word INDISPENSABLE is an adjective.

Meaning
It means absolutely necessary என்று சொல்லலாம் அதாவது முற்றிலும் தேவையான என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு விஷயம் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்று, தவிர்க்கவே முடியாது என்று வரும் பொழுது அந்த இடத்தில்தான் INDISPENSABLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக நாம் தமிழில் ஒரு பழமொழி சொல்லுவோம் அதாவது "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்று, இதனுடைய அர்த்தம் என்னவென்றால் உணவு சுவையாக இருக்க உப்பு தவிர்க்க முடியாத ஒன்று அல்லது முற்றிலும் தேவையான ஒன்று என்பதுதான்.

அதைப்போலவே சில வேலைகளில் சில மனிதர்கள் இருப்பார்கள். அந்த வேலையில் அவர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக மிகவும் தேவையான ஒன்றாக இருக்கும்.

இவ்வாறாக ஒரு குறிப்பிட்ட பொருளோ அல்லது ஒரு குறிப்பிட்ட மனிதனோ ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு தவிர்க்க முடியாத அளவுக்கு தேவையான ஒன்று என்று வரும் பொழுது அந்த இடத்திலே இந்த INDISPENSABLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். 

எனவே தமிழில் தவிர்க்க முடியாத அல்லது இன்றியமையாத போன்ற அர்த்தங்களில் இந்த INDISPENSABLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Mobile phone has become an indispensable tool for my business.
எனது வணிகத்திற்கு மொபைல் போன் ஒரு தவிர்க்க முடியாத கருவியாக மாறிவிட்டது.

Exercise and diet are indispensable for good health.
நல்ல ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் இன்றியமையாதது.

Practice it
எனவே நண்பர்களே! INDISPENSABLE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...