Know the word MISANTHROPE...
Word of the day is MISANTHROPE...
/ˈmɪs.ən.θroʊp/
Function
The word MISANTHROPE is a noun.
Meaning
It refers to someone who dislikes and avoids other people என்று சொல்லலாம் அதாவது மற்றவர்களை விரும்பாத மற்றும் தவிர்க்கும் ஒருவர் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு மனிதன் சக மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாதவனாக இருக்கும்பொழுது, சக மனிதர்களை வெறுக்க கூடியவனாக இருக்கும் பொழுது அந்த மனிதனை இந்த MISANTHROPE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
இப்படிப்பட்ட மனிதர்கள் சக மனிதர்களை வெறுக்க கூடியவர்களாக இருக்கிற காரணத்தினால் பொது இடங்களுக்கு செல்வதை விரும்ப மாட்டார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் மக்கள் கூட்டமாக கூடிவரும் இடங்களுக்கு செல்லவதை தவிர்ப்பார்கள்.
இவர்கள் சக மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பதனால் இவர்கள் யாருடனும் முகம் கொடுத்து பேசக்கூட மாட்டார்கள். இவர்கள் தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள்.
இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று நமக்கு நினைக்கத் தோன்றும் ஆனால் உண்மை என்னவென்றால் இப்படியும் குணம் படைத்த மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது தான்.
எனவே தமிழில் மனிதர்களை வெறுக்கின்ற அல்லது மனித இனத்தை வெறுக்கின்ற அல்லது மனிதர்களை நம்பாத அல்லது மக்கள் கூட்டத்தை வெறுக்கின்ற போன்ற அர்த்தங்களில் இந்த MISANTHROPE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
He is a misanthrope.
அவர் ஒரு மக்கள் கூட்டத்தை வெறுக்கின்றவர்.
If you are a misanthrope, you will have to live alone.
நீ மனிதர்களை வெறுக்கின்ற ஒருவராக இருந்தால், நீ தனிமையில் தான் வாழ வேண்டும்.
Practice it
எனவே நண்பர்களே! MISANTHROPE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக