Know the word PAINSTAKING...

Word of the day is PAINSTAKING...
Pronunciation
/ˈpeɪnzˌteɪ.kɪŋ/

Function
The word PAINSTAKING is an adjective.

Meaning
It means extremely careful and correct, and involving a lot of effort என்று சொல்லலாம் அதாவது அதிகமான கவனத்தையும் மிகச் சரியானவற்றையும் நிறைய முயற்சிகளையும் உள்ளடக்கிய என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த PAINSTAKING என்ற இந்த வார்த்தையிலேயே இந்த வார்த்தையினுடைய அர்த்தம் அடங்கி இருப்பதை உங்களால் பார்க்க முடியும். 

அதாவது ஒரு நபர் ஒரு விஷயத்தை அல்லது ஒரு காரியத்தை அல்லது ஒரு வேலையை அல்லது ஒரு திட்டத்தை செய்து முடிப்பதற்காக பல வலிகளை தாங்கி, பல சிரமங்களை எடுத்து, பல மணி நேரமாக இரவு பகல் பாராமல் பல நாட்களாக  கடுமையாகவும் கவனமாகவும் உழைத்து அந்த வேலையை செய்யும் பொழுது அந்த இடத்திலே இந்த PAINSTAKING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒரு புத்தகத்தை எழுதும் பொழுது அல்லது ஒரு உண்மை வரலாற்றை எழுதும்பொழுது அல்லது அறிவியல் சார்ந்து மருத்துவம் சார்ந்து பொருளாதாரம் சார்ந்து ஒரு ஆய்வை மேற்கொள்ளும் பொழுது அல்லது கடினமான ஒரு ஓவியத்தை வரையும் பொழுது PAINSTAKING என்ற இந்த ADJECTIVE ஐ பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் மிகுந்த சிரத்தை நிறைந்த அல்லது மிக கடினமான அல்லது வலிகள் நிறைந்த அல்லது அதிக கவனத்துடன் கூடிய போன்ற அர்த்தங்களில் PAINSTAKING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

In a sentence
This book is the outcome of his painstaking research.
இந்த புத்தகமானது அவரது மிகுந்த சிரத்தை நிறைந்த ஆராய்ச்சியின் முடிவு.

You should take painstaking effort to achieve your dream.
உனது கனவை அடைய நீ மிக கடினமான முயற்சி எடுக்க வேண்டும்.

Practice it
எனவே நண்பர்களே! PAINSTAKING என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...