Know the word RED-HANDED...
Word of the day is RED-HANDED...
/ˌredˈhæn.dɪd/
Function
The word RED-HANDED can be used as adjective and adverb.
Meaning
It means to find someone in the act of doing something illegal என்று சொல்லலாம் அதாவது சட்டத்திற்கு புறம்பான ஏதாவதொரு செயலை செய்கிற நிலையில் உள்ள ஒருவரை கண்டுபிடித்தல் என்று அர்த்தம்.
நண்பர்களே! இந்த RED-HANDED என்ற இந்த PHRASE ஐ இரண்டு விதமாக பயன்படுத்தலாம்.
முதலாவதாக ஒரு நபர் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்கு புறம்பான அல்லது ஏதாவதொரு தவறான செயலை செய்து கொண்டிருக்கின்ற அந்த நிலையிலேயே பிடிபடும் பொழுது பயன்படுத்தலாம்.
இரண்டாவதாக ஒரு நபர் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்கு புறம்பான அல்லது ஏதாவதொரு தவறான செயலை செய்த பிறகு அதனை நிரூபிக்கிற வகையில் சரியான ஆதாரங்களுடன் அவர் பிடிபடும் பொழுதும் பயன்படுத்தலாம்.
RED-HANDED என்ற இந்த PHRASE ஐ CATCH SOMEONE RED-HANDED என்று ஒரு IDIOM ஆகவும் பயன்படுத்தலாம்.
கொலை செய்த ஒருவர் கை முழுவதும் சிவப்பு நிற இரத்த கரையோடு பிடபட்டதிலிருந்து இந்த வார்த்தை தோன்றியதாக வரலாறு கூறுகிறது.
தமிழில் கையும் களவுமாக என்று சொல்லுவோம் அந்த இடத்திலே RED-HANDED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் எனவே கையும் களவுமாக என்று பயன்படுத்தலாம் அல்லது கையும் களவுமாக பிடிபடுதல் என்றும் பயன்படுத்தலாம்.
In a sentence
There was no way out and so he was caught red-handed.
வெளியேற வழி இல்லாததால் அவன் கையும் களவுமாக பிடிபட்டான்.
The police caught her red-handed.
போலீசார் அவளை கையும் களவுமாக பிடித்தனர்.
Practice it
எனவே நண்பர்களே! RED-HANDED என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக