Know the word SLUGGISH...

Word of the day is SLUGGISH...
Pronunciation
/ˈslʌɡɪʃ/

Function
The word SLUGGISH is an adjective.

Meaning
It means moving or operating more slowly than usual என்று சொல்லலாம் அதாவது வழக்கத்தை விட மெதுவாக நகருகின்ற அல்லது செயல்படுகின்ற என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! SLUGGISH என்ற இந்த வார்த்தையை எல்லா நிலைகளிலும் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் உடல் சோர்வினாலோ அல்லது தூக்கமின்மையினாலோ அல்லது பசி மயக்கத்திலோ அல்லது உண்ட மயக்கத்திலோ வழக்கத்தை விட மெதுவாக இயங்கும்பொழுது அந்த இடத்திலே இந்த SLUGGISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப் போலவே ஒரு வாகனமானது இயந்திர கோளாறு காரணமாக மெதுவாக இயங்கும் பொழுது அந்த இடத்திலே இந்த SLUGGISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே விறுவிறுப்பாக நல்ல லாபத்துடன் வேகமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு வணிகம் மந்த நிலையை அடையும் பொழுது அந்த இடத்திலும் இந்த SLUGGISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக ஒரு மனிதனோ அல்லது ஒரு வாகனமோ அல்லது ஒரு இயந்திரமோ அல்லது ஒரு வணிகமோ வழக்கமாக இயங்குகின்ற வேகத்தில் இயங்காமல் வழக்கத்தைவிட மெதுவாக இயங்கும்பொழுது அந்த இடத்திலே இந்த SLUGGISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் மந்தமாக அல்லது தாமதமாக அல்லது சோம்பலாக அல்லது மெதுவாக போன்ற அர்த்தங்களில் இந்த SLUGGISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The business faces sluggish sales these days.
இந்த நாட்களில் வணிகம் மந்தமான விற்பனையை எதிர்கொள்கிறது.

The car seems sluggish because there is some problem in the engine.
இன்ஜினில் ஏதோ பிரச்சனை இருப்பதால் கார் மந்தமாக இயங்குவது போல் தெரிகிறது.

Practice it
எனவே நண்பர்களே! SLUGGISH என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...